மாருதி செலிரியோ ஏஎம்டி டாப் வேரியண்ட் அறிமுகம்

மாருதி செலிரியோ காரில் அதிகப்படியான வசதிகளுடன் கூடிய புதிய ஏஎம்டி டாப் வேரியண்ட் இசட்எக்ஸ்ஐ என்ற வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

மாருதி செலிரியோ ஏஎம்டி

முதல் வருட கொண்டாட்டத்தை ஓட்டி இந்த புதிய டாப் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ மாடல்களை விட இசட்எக்ஸ்ஐ கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது.

67பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 90என்எம் ஆகும். தானியங்கி மெனுவல் கியர்ஷிஃப்ட் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

செலிரியோ  இசட்எக்ஸ்ஐ மாடலில் கார் நிறத்தில் கைப்பிடிகள் , ரியர் விங் கண்ணாடியில் எலக்ட்ரிக் அமைப்பு முறை , பின்புறத்தில் வைப்பர் மற்றும் பனி விளக்குகள் உள்ளது.

உட்ப்புறத்தில் ரிமோட் லாக் , யூஎஸ்பி தொடர்பு மற்றும் ஆக்ஸ்-இன் இணைப்பு , ஸ்டீயரிங் சக்கரத்தில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள் , வெளிப்புற வெப்பநிலை , இருக்கை பட்டை எச்சரிப்பு,  ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

மாருதி செலிரியோ ZXi விலை ரூ.4.99 லட்சம் (ex-showroom, Delhi)