மாருதி செலிரியோ காரில் ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக் நிரந்தரம்

0

ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக் அம்சங்களை மாருதி செலிரியோ காரின் அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. செலிரியோ சிஎன்ஜி மாடலில் மட்டும் காற்றுப்பைகளை மட்டும் பெற்றுள்ளது.

celerio car

Google News

 

 

இந்தியாவில் ஏஎம்டி கியர்பாக்ஸூடன் வந்த முதல் காரான மாருதி செலிரியோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் சிஎன்ஜி மாடலும் கிடைக்கின்றது. விற்பனைக்கு வந்த 21 மாதங்களில் இதுவரை 1.30 லட்சம் செலிரியோ கார்கள் விற்பனை ஆகியுள்ளது. குறைவான விலை, சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களால் சிறப்பான வரவேற்பினை பெற காரணமாகும்.

தனது அனைத்து கார் மாடல்களிலும் ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பைகள் பொருத்தப்பட்ட ஆப்ஷனல் மாடல்களை அறிமுகம் செய்வதில் தீவரம் காட்டி வருகின்றது.  சமீபத்தில் வேகன் ஆர் , வேகன் ஆர் ஸ்டிங்கரே , ஸ்விஃப்ட் , டிசையர் போன்ற கார்களில் காற்றுப்பைகள் சேர்க்கப்பட்டுள்ளளது.

இதுகுறித்து ஆர்எஸ் கல்சி தெரிவிக்கையில் ,

முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பேஸ் வேரியண்டிலும் வந்துள்ள செலிரியோ கார் வாடிக்கையார்களை கவரும் , பாதுகாப்பு அம்சங்களுடன் வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியானது என கூறியுள்ளார்

மாருதி செலிரியோ விலை பட்டியல்

பெட்ரோல்

மாருதி செலிரியோ LXi(O) – ரூ. 4,16,807

மாருதி செலிரியோ LXi AMT(O) – ரூ.  4,66,548

மாருதி செலிரியோ VXi(O) – ரூ. 4,46,830

மாருதி செலிரியோ VXi AMT(O) – ரூ. 4,96,564

மாருதி செலிரியோ ZXi AMT(O) – ரூ. 5,19,423

டீசல்

மாருதி செலிரியோ LDi(O) – ரூ. 4,91,808

மாருதி செலிரியோ VDi(O) – ரூ. 5,21,830

சிஎன்ஜி

மாருதி செலிரியோ Green (O) – ரூ. 5,04,189

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )