மாருதி பலேனோ & எஸ் க்ராஸ் கார்களில் ISOFIX இருக்கைகள்

0

பிரசத்தி பெற்ற மாருதி பலேனோ மற்றும் மாருதி எஸ் க்ராஸ் கார்களில் ISOFIX மொவுன்ட்ஸ் பாதுகாப்பு அம்சத்தை கொண்ட இருக்கைள் சேர்க்கப்பட்டுள்ளது. பலேனோ , எஸ்-க்ராஸ் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்படுகின்றது.

Maruti S Cross

Google News

நெக்ஸா பிரிமியம் டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகின்ற பலேனோ மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ISOFIX மொவுன்ட்ஸ் இருக்கை வசதியின் வாயிலாக சிறப்பாக பாதுகாப்பு தரம் மேம்பாடு அடைந்துள்ளது. பலேனோ காரில் வேறு எந்த மாற்றங்களும் இடம் பெறவில்லை. எஸ் க்ராஸ் காரில் புதிதாக 16 அங்குல கன்மெட்டல் அலாய் வீல் சேர்க்கப்பட்டுள்ளது.

என்ஜின் பவர் , டார்க் வசதிகள் போன்றவற்றில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் கிடைக்க உள்ள இரு கார்களிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக் , ஏபிஎஸ் போன்றவை நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் மாருதி சுஸூகி பலேனோ ரூ.5.43 லட்சம் முதல் ரூ.8.59 லட்சம் வரையும் , மாருதி எஸ்-க்ராஸ் ரூ.8.45 லட்சம் முதல் ரூ.12.53 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

(அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை )