மாருதி பலேனோ RS பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – price updated

0

மாருதி சுஸூகி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்களில் விற்பனைக்கு வரவுள்ள பவர்ஃபுல்லான மாருதி சுஸூகி பலேனோ RS கார் பற்றி முக்கிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சாதரன பலேனோ காரை விட கூடுதலான பவரை ஆர்எஸ் வெளிப்படுத்தும்.

கடந்த தீபாவளி பண்டிகை காலத்திலே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட பலேனோ பூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் விட்டாரா பிரெஸ்ஸா , பலேனோ போன்ற மாடல்களுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பின் காரணமாக தாமதமாக வருகின்ற 2017 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Google News

RS என்றால் விரிவாக்கம் ROAD SPORT ஆகும்.

1. பலேனோ ஆர்எஸ் டிசைன்

சாதரன பலேனோ காரின் தோற்ற அமைப்பிலே அமைந்திருந்தாலும் சிறிய அளவிலான மாற்றங்களை முன் மற்றும்பின் பம்பர்கஸளில் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பக்கவாட்டில் புதிய அலாய் வீல் டிசைன் பெற்றிருக்கும்.

Maruti Baleno RS concept

பலேனோ RS எஞ்ஜின்

சாதரன பலேனோ காருக்கும் பலேனோ ஆர்எஸ் காருக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசமே 1.2 பெட்ரோல் எஞ்ஜினை சாதரன பெலினோ பெற்றிருக்கும்.

பவர்ஃபுல்லான பலேனோ RS 100.5 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 நியூட்டன்மீட்டர் ஆகும்.  பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். பலேனோ ஆர்எஸ் மைலேஜ் லிட்டருக்கு 20.1 கிமீ ஆகும்.

என்ஜின்  (cc) 998
அதிகபட்ச பவர் (hp@rpm) 100.5/5500
அதிகபட்ச டார்க் (Nm@rpm) 150/1700-4500
எரிபொருள் பலன் (l) 37
எரிபொருள்வகை பெட்ரோல்
கேம்ஷாஃப்ட் DOHC
சிலிண்டர் எண்ணிக்கை 3

3. பெலினோ ஆர்எஸ் சிறப்பு வசதிகள்

விற்பனையில் உள்ள டாப் ஆல்ஃபா வேரியன்டில் இடம்பெற்றுள்ள அதே சிறப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கும். குறிப்பாக பை-ஸெனான் தானியங்கி ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் விளக்குகள் , 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , நேவிகேஷன், ஸ்மார்ட்போன் ஆதரவினைபெற்றதாக இருக்கும். மேலும் ஒரே வேரியண்டில் மட்டுமே  ஆர்எஸ் வரலாம்.

4. பாதுகாப்பு அம்சங்கள்

பலேனோ ஆர்எஸ் காரில் முன்பக்க இரண்டு ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் , ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார் போன்ற அம்சங்களும் இடம்பிடித்திருக்கும்.

Maruti Baleno RS concept rear

5. நிறங்கள்

சிவப்பு, வெள்ளை, நீலம், ரே நீலம், சில்வர், ஆரஞ்சு  மற்றும் கிரே ஆகிய வண்ணங்களில் மட்டுமே கிடைக்க உள்ளது.

6. போட்டியாளர்கள்

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி மற்றும் ஃபியட் அபாரத் புன்ட்டோ போன்ற கார்களுக்கு சவாலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7. விலை

நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ள மாருதி பலேனோ RS விலை ரூ.8.69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) அமைந்துள்ளது.

பெலினோ ஆர்எஸ் படங்கள் 

[foogallery id=”16935″]