மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் டீசல் விற்பனைக்கு அறிமுகம்

0
மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் பெட்ரோல் மாடலை தொடர்ந்து சி கிளாஸ் டீசல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

சி220 சிடிஐ டீசல் சி கிளாஸ் சொகுசு செடான் காரினை முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில் பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைத்து விற்பனை செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

சி கிளாஸ் பெட்ரோல் மாடலை தொடர்ந்து என்ட்ரி லெவல் சொகுசு செடான் சி கிளாஸ் டீசல் என்ஜினில் இரண்டு விதமான வேரியண்ட்களில் சி கிளாஸ் கிடைக்கும். அவை ஸ்டைல் மற்றும் அவான்த்கார்ட் ஆகும்.

Google News

168எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 400என்எம் ஆகும். 7 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

சி கிளாஸ் டீசல் டாப் மாடலான அவான்த்கார்ட்டில் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி , 8.4 இஞ்ச் தகவமைப்பு , செயற்கைகோள் நேவிகேஷன்,  13 ஸ்பீக்கர்கள், பின்புற பார்க்கூடிய கேமிரா, பூளூடூத் இணைப்பு  போன்ற வசதிகள் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.27கிமீ ஆகும்.

சி கிளாஸ் டீசல் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 233கிமீ ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் விலை (ex-showroom delhi)

சி220 சிடிஐ ஸ்டைல் – 39.9 லட்சம்

சி220 சிடிஐ அவான்த்கார்ட் – 42.9 லட்சம்

சி200 சிஜிஐ அவான்த்கார்ட் – 40.9 லட்சம் (பெட்ரோல்)

மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்