ரூ 1.45 கோடியில் மெர்சிடிஸ் எஸ்யூவி கார்

0
மெர்சிடிஸ்-பென்ஸ் உலகின் மிக பழமையான ஆட்டோமொபைல் நிறுவனமாகும். மெர்சிடிஸ் ஜி63 ஏஎம்ஜி என்ற எஸ்யூவி காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவி கார் விலை 1.45 கோடி ஆகும்.

Mercedes G63 AMG

33 வருடங்களாக விற்பனையில் உள்ள  மெர்சிடிஸ் ஜி63 ஏஎம்ஜி முன்பு ஜி55 ஏஎம்ஜி என அழைக்கப்பட்டது. இதனை ஜி-க்ளாஸ் எஸ்யூவி எனவும் அழைப்பர். மேலும் ஜி-வேகன் எனவும் சொல்லாம். 33 வருடங்களாக விற்பனையில் உள்ள ஜி-வேகன் எஸ்யூவி காரில் பெரிதாக வெளிபுற தோற்றத்தில் மாற்றம் செய்யவில்லையாம்.

தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜி-க்ளாஸ் காரில் பல புதிய நுட்ப வசதிகள் மற்றும் உட்புற கட்டுமானத்தில் மட்டும் சில மாற்றங்களை தந்துள்ளது.அதைவிட முக்கியமானது எஞ்சின் புதிதாக மாற்றியுள்ளது.

Google News

ஜி வேகன் என்ஜின்

5.5 லிட்டர் வி8 ட்வீன்-டர்போசார்ஜடு என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 544BHP @ 5500rpm மற்றும் டார்க் 760NM @5000 rpm ஆகும். இதன் ட்ரான்ஸ்மிஷன் 7ஜிடரானிக் 7 ஸ்பீடு க்யர்பாக்ஸ் ஆகும். 5.5 விநாடிகளில் 0-100கீமி வேகத்தை தொடும்.

ஜி63 ஏஎம்ஜி காரில் உள்ள பல புதிய வசதிகள் ஈகோ முறையில் ஆன்/ஆஃப் பட்டன், ஏஎம்ஜி சிறப்பான பிரேக்,ஏஎம்ஜி ஸ்போர்ட் புகைப்போக்கி, ESP (electronic stability program), ESPயில் ரிவர்ஸ் செல்லவும் உதவும்.மலையேற உதவி,பார்க்கிங் செய்ய பார்க்கட்ரானிக்.

ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவி கார் விலை 1.45கோடி (மும்பை விலை)