வால்வோ எக்ஸ்சி90 டி8 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவின் முதல் ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பினை பெற்ற காராக விற்பனைக்கு வந்துள்ள வால்வோ எக்ஸ்சி90 டி8 ஹைபிரிட் கார் விலை ரூ.1.25 கோடி ஆகும்.  பிளக் இன் ஹைபிரிட் வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி காரின் விலையுடன் இரு சார்ஜிங் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து தரவுள்ளது.

எக்ஸ்சி90 டி8 எக்ஸ்லென்ஸ் வேரியண்டில் 320 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 87 hp ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டின் மொத்தமும் சேர்த்து 407 குதிரை சக்தியுடன் 640 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும்.  மேலும் 40 கிலோ மீட்டர் வரை முழுமையான எலக்ட்ரிக் மாடலாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

வால்வோ XC90 T8 வேரியண்டில் ரேடார் கருவியை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு அமைப்பினை பெற்றுள்ளது. 360 டிகிரி கோணத்தில் செயல்படும் ரேடார் உதவினால் அடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் , வாகனம் மோதலை தடுக்கும் வார்னிங் சிஸ்டம் மற்றும் அவசர காலங்களில் அதவாது பாதசாரிகள் , சைக்கிள்கள் , பெரிய மிருகங்கள்  போன்றவை எதிரில் திடீரென வந்தால் தானியங்கி முறையில் பிரேக்கிங் செய்துகொள்ளும் வசதியை பெற்றுள்ளது.

டி8 வசதிகள்

பல நவீன வசதிகளை பெற்றுள்ள டி8 வேரியண்டில் பின்புற வரிசையில் உள்ள இரண்டு இருக்கைகள் மசாஜ் வசதி . சிறப்பான காற்றுட்டோமுள்ள இருக்கைகளாக மற்றும் கூடுதல் இடவசதியுடன் நவீனத்துவாமன அம்சங்களை கொண்டதாக இருக்கும். பின்புற பயணிகளுக்கு தனித்தனியான தொடுதிரை சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வால்வோ XC90 எஸ்யூவி காரில் ஃபோல்டிங் டேபிள் , குளிர்சாதன வசதி ,ஹீட்டிங் மற்றும குளர்ச்சி அடைய ஹோல்டர் என பல வசதிகளை கொண்டுள்ளது.

சர்வதேச அளிவல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே விற்பனை செய்யப்படுகின்ற வால்வோ XC90 டி8 எக்ஸ்செலன்ஸ் வேரியண்ட் இந்தியாவில் 50க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.

வால்வோ எக்ஸ்சி90 டி8 ஹைபிரிட் கார் விலை ரூ.1.25 கோடி (எக்ஸ்ஷோரூம் டெல்லி )