வால்வோ S60 க்ராஸ் கன்ட்ரி விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவில் வால்வோ S60 க்ராஸ் கன்ட்ரி செடான் கார் ரூ. 38.90 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசு மற்றும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட செடான் காராக வால்வோ S60 க்ராஸ் கன்ட்ரி விளங்குகின்றது.

Volvo-S60-Cross-Country

செடான் ரக கார்களில் மிக சிறப்பான எஸ்யூவி தாத்பரியங்களை கொண்டு க்ராஸ்ஓவர் செடான் காராக வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்60 க்ராஸ் கன்ட்ரி காரில் 190 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் D4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 420 Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.  ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

Volvo-S60-Cross-Country-interior

201மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டிருக்கும் வால்வோ எஸ்60 க்ராஸ் கன்ட்ரி சாஃப்ட் ரோடர் காரில் சிறப்பான வகையில் ஆஃப் ரோடுகளிலும் பயன்படுத்த இயலும் . நேர்த்தியான கட்டமைப்புடன் விளங்கும் முழுமையான வசதிகளை கொண்டுள்ள ஃபுல்லி லோடேட் டாப் வேரியண்ட் மட்டுமே இந்தியா வந்துள்ளது.

இதில் முன்பக்க , பக்கவாட்டு மற்றும் கர்டைன் காற்றுப்பைகள் , லேஸர் உதவியுடன் இயங்கும் தானியங்கி பிரேக் சுமார் 50 கிமீ வேகம் வரை செயல்படும் , செயற்கைக்கோள் தொடர்பு நேவிகேஷன் அமைப்பு , முன் , பின் சென்சார் , ரியர் வியூ பார்க்கிங் கேமரா போன்ற பல முக்கிய அம்சங்களை பெற்றுள்ளது.

நேரடியான போட்டி மாடல்கள் எஸ்60 க்ராஸ் கன்ட்ரி மாடலுக்கு இல்லையென்றாலும் மெர்சிடிஸ் சி கிளாஸ் , பிஎம்டபிள்யு 3 சீரிஸ் மற்றும் ஆடி ஏ4 போன்ற மாடல்கள் போட்டியாக விளங்கும்.

வால்வோ S60 க்ராஸ் கன்ட்ரி கார் விலை ரூ.38.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி )

Volvo-S60-Cross-Country-side Volvo-S60-Cross-Country-rear