வால்வோ S60 போல்ஸ்டார் கார் அறிமுகம்..!

இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் புதிய வால்வோ S60 போல்ஸ்டார் சொகுசு பெர்ஃபாமென்ஸ் கார் ரூபாய் 52 லட்சத்து 50 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

வால்வோ s60 போல்ஸ்டார்

  • வால்வோ நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் பிராண்டாக போல்ஸ்டார் செயல்படுகின்றது.
  • எஸ்60 காரில் 367hp பவரை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • சாதாரன எஸ்60 செடான் ரக காரை அடிப்படையாக கொண்ட செயல்திறன் மிக்க மாடலாகும்.

எஸ்60 போல்ஸ்டார் செடான் காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 367 ஹச்பி ஆற்றலையும், 470 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும். இதில் பேடில் ஷிப்டர்கள் உடன் கூடிய 8 வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்க கூடிய எஸ்60 போல்ஸ்டார், 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.7 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

வழக்கமான எஸ்60 செடான் காரிலிருந்து வித்தியாசப்படும் வகையில் ஸ்போர்ட்டிவ் பாடி கிட்களை போல்ஸ்டார் மாடல் பெற்றுள்ளது. குறிப்பாக ஏரோ அமைப்பு கொண்ட கிட்கள் , புதிய ஸ்போர்ட்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் டேம்பர்,  20 இஞ்ச் அலாய் வீல் உள்பட சிறப்பான பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய பிரேக்குகளை கொண்டுள்ளது.

இன்டிரியரில் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள முன்பக்க ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் , உயர்தர கார்பன் ஃபைபர் வேலைப்பாடுகள் கொண்ட கேபின், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி என பலவற்றை பெற்று விளங்குகின்றது.

வால்வோ S60 போல்ஸ்டார் மாடல் இந்திய சந்தையில் பெட்ரோல் எஞ்சின் பெற்ற ஒரே வேரியன்ட் மட்டுமே விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த காரின் போட்டியாளர்களாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி43 கார் விளங்குகின்றது.

வால்வோ S60 போல்ஸ்டார் விலை ரூ. 52.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை)

 

Recommended For You