புதிய ஹூண்டாய் எலன்ட்ரா விற்பனைக்கு வந்தது

0

மிக நேர்த்தியான டிசைனுடன் புதிய ஹூண்டாய் எலன்ட்ரா கார் ரூ.12.99 தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் உலகயளவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மாடலாக எலன்ட்ரா விளங்குகின்றது.

all-new-hyundai-elantra

Google News

உலகயளவில் ஹூண்டாய் கார் நிறுவனத்தின் அதிகம் விற்பனை செய்யப்படும் மாடலாக விளங்கும் எலன்ட்ரா இதுவரை 11.5 மில்லியன் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் 2.0 ஃபூளூடியக் ஸ்கல்ப்ச்சர் டிசைன் வடிவ தாத்பரியத்தை அடிப்படையாக கொண்ட மாடலாக ஆல் நியூ எலன்ட்ரா வந்துள்ளது.

6வது தலைமுறை புதிய எலன்ட்ரா காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்ஜின் ஆற்றல் 152 hp மற்றும் டார்க் 190 Nm ஆகும். 1.6 லிட்டர் CRDi எஞ்ஜின் ஆற்றல் 126 hp மற்றும் டார்க் 265 Nm ஆகும்.  இரு என்ஜின் ஆப்ஷனிலும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கும்.

2017-Hyundai-Elantra-Interior

ஹூண்டாய் எலன்ட்ரா டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22.54 கிமீ (மெனுவல்) மற்றும் 18.23 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

ஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.59 கிமீ (மெனுவல்) மற்றும் 14.62 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

S, SX, SX AT, SX(O), SX(O) AT என மொத்தம் 5 விதமான வேரியண்ட் ஆப்ஷனை பெற்ற மாடலாக விளங்கும். புதிய எலன்ட்ரா டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகள்  மற்றும் வெகிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்றவற்றுடன் அனைத்து வேரியண்ட்களிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பை ஏபிஎஸ் மற்றும் இபிடி நிரந்தரமாக சேர்க்கப்பட்டுள்ளது. சில்வர் , நீளம் , சிவப்பு ,கருப்பு மற்றும் வெள்ளை என மொத்தம் 5 விதமான வண்ணங்களில் ஹூண்டாய் எலன்ட்ரா கிடைக்க உள்ளது.

டொயோட்டா கரோல்லா , ஸ்கோடா ஆக்டாவியா  , செவர்லே க்ரூஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா போன்ற மாடல்களுடன் எலன்ட்ரா சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது.

ஹூண்டாய் எலன்ட்ரா பெட்ரோல் கார் விலை

Hyundai Elantra S – ரூ.12.99 லட்சம்
Hyundai Elantra SX – ரூ. 14.79 லட்சம்
Hyundai Elantra SX AT- ரூ.  15.89 லட்சம்
Hyundai Elantra SX (O)- ரூ.  16.59 லட்சம்
Hyundai Elantra SX (O) AT – ரூ. 17.99 லட்சம்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா டீசல் கார் விலை

Hyundai Elantra S : ரூ 14.99 லட்சம்
Hyundai Elantra SX : ரூ. 16.39 லட்சம்
Hyundai Elantra SX (O) : ரூ. 17.69 லட்சம்
Hyundai Elantra SX (O) AT ; ரூ. 19.90 லட்சம்

( அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை )