ஹூண்டாய் எலைட் ஐ20 சிறப்பு பதிப்பு அறிமுகம்

0
ஹூண்டாய் எலைட் i20 காரில் ரூ.6.69 லட்சம் விலையில் செலபிரேஷன் சிறப்பு பதிப்பினை விரைவில் ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளது.

ஹூண்டாய் எலைட் ஐ20

எலைட் ஐ20 மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் கூடுதல் துனைகருவிகளை சேர்த்து செலபிரேஷன் பதிப்பு என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

செலிபிரேஷன் பதிப்பில் 16 இஞ்ச் டைமன்ட் கட் அலாய் வீல் , பாடி ஸ்டிக்கரிங் , சி பில்லர் மற்றும் மேற்கூரையில் கருப்பு வண்ணம் மற்றும் சிறப்பு பேட்ஜ் போன்றவை பெற்றுள்ளது. உட்புறத்தில் ஸ்போர்ட்டிவ் பெடலை பெற்றுள்ளது. வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.

Google News

சிறப்பு பதிப்பில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் எலைட் ஐ20 கார் கிடைக்கும் . விலை விபரங்களை தனது அதிகார்வப்பூர்வ இணையத்தில் ஹூண்டாய் வெளியிட்டுள்ளது

ஹூண்டாய் எலைட் ஐ20 சிறப்பு பதிப்பு விலை விபரம்

எலைட் ஐ 20 சிறப்பு பதிப்பு ; ரூ.6.83 லட்சம் (பெட்ரோல்)

எலைட் ஐ 20 சிறப்பு பதிப்பு ; ரூ.7.98 லட்சம் (டீசல்)

 { சென்னை எக்ஸ்ஷோரூம் விலை }

Hyundai Elite i20 gets Celebration Edition