ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் விற்பனைக்கு வந்தது

0
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கிராஸ்ஓவர் ஹேட்பேக் காரினை விற்பனைக்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எலைட் ஐ20 காரினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஐ20 ஆக்டிவ் கார் மொத்தம் 5 விதமான வேரியண்டிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.

ஐ20 ஆக்டிவ் கார்

1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 82எச்பி ஆகும். இதன் முறுக்குவிசை 114 என்ம் ஆகும். 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது

1.4 லிட்டர் டீசல் என்ஜின் 89பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாகும். இதன் முறுக்குவிசை 220என்எம் ஆகும். 6 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.

கிராஸ்ஓவர் மாடல் என்பதால் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் 6 சதவீத வேகத்தினை பெட்ரோல் மாடலிலும் 11 சதவீத வேகத்தினை டீசல் மாடலிலும் கொடுக்கும் வகையில் என்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஐ20 ஆக்டிவ் காரின் நீளம் 3995மிமீ , அகலம் 1760மிமீ மற்றும் உயரம் 1555மிமீ ஆகும். கிராஸ்ஓவர் கார் என்பதனால் கிலவுண்ட கிளயரன்ஸ் 190மிமீ கொண்டுள்ளது.

முகப்பு தோற்றத்தினை பொருத்தவரை மிக நேர்த்தியான கிரில் மற்றும் வட்ட வடிவ பனி விளக்குகள் மற்றும் புராஜெக்டர் முகப்பு விளக்கினை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் மிக அழகான 16 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீல் மற்றும் ஸ்கீட் பிளேட்டினை கொண்டுள்ளது.

ஐ20 ஆக்டிவ் இன்டிரியர்

உட்ப்புறத்தில் இரண்டு விதமான இண்டிரியர் வண்ணங்கள் உள்ளது. அவை டேங்கிரெயின் ஆரஞ்ச் கலந்த கருப்பு வண்ண கலவை மற்றும் ஆக்வா நீளம் கலந்த கருப்பு வண்ணத்திலும் கிடைக்கும்.

ஐ20 ஆக்டிவ் காரில் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக், தானியங்கி முகப்பு விளக்குகள், கார்னரிங் விளக்குகள், பகல் நேர எல்இடி விளக்குகள், கீலெஸ் என்டரி, இம்மொபைல்சர் , ஸ்மார்ட் பெடல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்,  விபத்தின் பொழுது தானாகவே கதவுகள் திறந்து கொள்ளும் சென்சார், இம்மொபைல்சர் என பல வசதிகள் உள்ளன.

ஐ20 ஆக்டிவ் காரின் படங்கள்

மேலும் சர்வீஸ் ரிமைன்டர், கியர் ஸ்ஃப்ட் இன்டிக்கெட்டர், 2டின் ஆடியோ அமைப்பு, ஆக்ஸ், யூஎஸ்பி மற்றும் பூளூடுத் தொடர்பு போன்ற வசதிகள் உள்ளன.

ஐ20 ஆக்டிவ் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17.19கிமீ ஆகும். டீசல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 21.19கிமீ ஆகும்.

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் விலை (ex-showroom, Delhi)

பெட்ரோல்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் 1.2 – ரூ.6.38 லட்சம்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் 1.2S -ரூ.7.09 லட்சம்

டீசல்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் 1.4 — ரூ. 7.63 லட்சம்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் 1.4S — ரூ. 8.34 லட்சம்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் 1.4Sx — ரூ.8.89 லட்சம்

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார்