புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு வந்தது – updated

0

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் 2017 ஹூண்டாய் கிராண்ட் i10 கார் ரூ. 4.58 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கிராண்ட் ஐ10 கார் பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

2017 hyundai grand i10 launched

Google News

 

2013 ஆம் ஆண்டில் கிராண்ட் ஐ10 மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றிருந்த நிலையில் 2017 ஹூண்டாய் கிராண்ட் i10 மாடல் கூடுதலாக பல மாற்றங்களை பெற்றுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விபரம்

1. டிசைன்

2017 ஹூண்டாய் ஐ10 கார் முதன்முறையாக  பாரீஸ் மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது.  ஐரோப்பியா வடிவ தாத்பரியங்களை கொண்ட இதே மாடலின் அடிப்படையிலே சில தோற்ற மாற்றங்களை பெற்றதாக இந்தியாவில் வரவுள்ளது. முந்தைய மாடலின் தோற்றத்தில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கிரில் அமைப்பு , ஹெட்லேம்ப் உடன் இணைந்த பகல் நேர ரன்னிங் விளக்கு , புதிய 14 அங்குல அலாய் வீல் , புதுப்பிக்கப்பட்ட பின்புற பம்பர் மற்றும் டெயில் விளக்குகளை பெற்றிருக்கும்.

 

2. இன்டிரியர்

மேம்படுத்தப்பட்ட இன்டிரியர் ஆப்ஷனுடன் கூடுதலாக சில வசதிகளை பெற்றுள்ள கிராண்ட் ஐ10 காரில் குறிப்பாக புதிய 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு விதமான நவீன வசதிகளுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் , புதிய அப்ஹோல்ஸ்ட்ரி , லைட் இல்மினேஷன் போன்றவற்றை கொண்டிருக்கும்.

2017 hyundai grand i10 dashboard

3. எஞ்சின்

1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். கூடுதலாக பெட்ரோல் மாடலில் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.  முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட புதிய 1.2லிட்டர் டீசல்  75 hp மற்றும் 171Nm டார்க் வெளிப்படுத்தும் . 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

 

4. பாதுகாப்பு அம்சங்கள்

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக விளங்கும் முன்பக்க இரு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்றவை அனைத்து வேரியன்டிலும் இடம்பெற்றிருக்கும்.

6. கிராண்ட் ஐ10 விலை

சமீபத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் புதிய கிராண்ட் ஐ10 கார் விலை ரூ. 4.58 லட்சம் முதல் ரூ.6.39 லட்சம் வரை பெட்ரோல் மாடல்களும் , டீசல் மாடல் விலை ரூ. 5.68 லட்சம் முதல் ரூ.7.32 லட்சம் வரை (டெல்லி எக்ஸ்ஷோரூம்) அமைந்துள்ளது.

2017 கிராண்ட் ஐ10 விலை பட்டியல்
 பெட்ரோல் வேரியன்ட்  புதிய விலை பழைய விலை வித்தியாசம்
Era ₹ 4,58,400 ₹ 494,701 – ₹ 36,301
Magna ₹ 5,22,990 ₹ 522,140 ₹ 850
Sportz ₹ 5,65,990 ₹ 567,323 – ₹ 1,333
Magna AT ₹ 5,98,990 ₹ 599,950 – ₹ 960
Sportz (O) ₹ 5,96,295 ₹ 662,317 – ₹ 66,022
Sportz (O) AT ₹ 6,82,790 NA NA
Asta ₹ 6,39,890 ₹ 613,751 ₹ 26,130

 

டீசல் வேரியன்ட்  புதிய விலை  பழைய விலை  வித்தியாசம்
Era ₹ 5,68,400 ₹ 581,465 – ₹ 13,065
Magna ₹ 6,15,990 ₹ 609,361 ₹ 6,629
Sportz ₹ 6,58,989 ₹ 642,007 ₹ 16,982
Sportz (O) ₹ 6,89,791 NA NA
Asta ₹ 7,32,890 ₹ 702,653 ₹ 30,237

 

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் )

2017 hyundai grand i10 rear