ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம் வெளியானது – update

ஹோண்டா நிறுவனத்தின் டீசல் என்ஜினுடன் வந்த முதல் மாடலான ஹோண்டா அமேஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் வருகின்ற மார்ச் 3ந் தேதி புதிய அமேஸ் கார் விற்பனைக்கு வருகின்றது.

2016-Honda-Amaze-facelift-leaked

முகப்பின் தோற்றத்தின் ரேடியேட்டடர் கிரில் , முகப்பு விளக்கு, போன்றவற்றை புதுப்பிக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் பின்புறத்தில் பம்பர் போன்றவை புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்.

உட்புறத்தில் சில மாற்றங்களை பெற்றிருக்கலாம் . ஏர்பேக் , ஏபிஎஸ் போன்றவை அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக இருக்கலாம்.

88 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 109 Nm ஆகும். 100 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் வேரியண்டில் ஆப்ஷனாலாக 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்சினை பெற்றுள்ளது. ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றி எந்த மாற்றங்களும் இருக்காது.

source:gaadiwaadi