ஹோண்டா அமேஸ் டீசல் கார் -சில விபரங்கள்

0
ஹோண்டா அமேஸ் மிகவும் எதிர்பார்க்கப்படும் கார்களில் இதுவும் ஒன்று. ஹோண்டா அமேஸ் கார்  டீசல் எஞ்சினில் வெளிவருகின்றது. ஏப்பரல் மாதம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda+Brio+Amaze
பிரியோ காரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அமேஸ் இரண்டு வகையான எஞ்சினில் வெளிவருகின்றது.
1.5 லிட்டர் i-DTEC டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 85-90எச்பி ஆக இருக்கலாம். இதனுடைய  மைலேஜ் 23kmpl(ARAI certified) ஆகும். 5 ஸ்பீடு மேன்வல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.

1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சின் (பிரியோ ஹேட்ச்பேக் எஞ்சின்)பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 87எச்பி ஆக இருக்கலாம். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு வசதிகள் காற்றுப்பை,ஏபிஎஸ் மற்றும் ஈபிடி ஆகியவை பயன்படுத்தியுள்ளனர்.

ஹோண்டா அமேஸ்  விலை ரூ 5.5 இலட்சத்தில் ஆரம்பம் ஆகலாம். சில ஷோரூம்களின் முன்பதிவு நடைபெறுகின்றது.