ஹோண்டா அமேஸ், மொபிலியோ சிறப்பு எடிசன்

0
ஹோண்டா அமேஸ் மற்றும் மொபிலியோ கார்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பு விற்பனைக்கு வந்துள்ளது. அமேஸ் மற்றும் மொபிலியோ காரின் உட்புறத்தில் மட்டும் சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ், மொபிலியோ

செலிபிரேஷன் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பதிப்பில் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை . வெளிபுறத்தில் ஸ்டிக்கிரிங் செய்யப்பட்டுள்ளது.

அமேஸ் மற்றும் மொபிலியோ காரின் உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி , இருக்கை கவர் , ஸ்டீயரிங் வீல் கவர் மற்றும் மிதியடிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிபுறத்தில் பாடி ஸ்டிக்கரிங் மற்றும் பின்புறத்தில் செலிபிரேஷன் எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்டிருக்கும். வெள்ளை மற்றும் ஆர்சிட் வொய்ட் பேல் வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும்.

அனைத்து நிறுவனங்களும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றது.
Honda Amaze and Mobilio Celebration Edition lhaunched