ஹோண்டா சிட்டி புதிய வேரியண்ட் அறிமுகம்

0
ஹோண்டா சிட்டி காரில் புதிய டாப் வேரியண்ட் காரை டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி

புதிய வேரியண்ட் VX(O) என்ற பெயரில் வந்துள்ள இந்த வேரியண்டில் மெனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். VX வேரியண்டுக்கு மேல் நிலை நிறுத்தப்படும் இந்த வேரியண்ட் டாப் மாடலாக விளங்கும்.

ஹோண்டா சிட்டி VX(O) வேரியண்டில் 6.2 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோன்டெயின்மென்ட் அமைப்புடன் கூடிய செயற்க்கைகோள் தொடர்பு நேவிகேஷன் உள்ளது.  மேலும் பூளூடூத் இணைப்பின் மூலம் அலைபேசி தொடர்பினை ஏற்படுத்தி அழைத்துக்கொள்ள முடியும் , தொடர்புகள் மற்றும் தொடர்பு கொண்ட எண்களை அறிய முடியும். ரிவர்ஸ் கேமரா சேர்க்கப்பட்டுள்ளது.

Google News

புதிதாக வெள்ளை ஆர்ச்சீட் பீயரல் வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி VX(O) வேரியண்ட் விலை விபரம் (ex-showroom, Delhi)

ஹோண்டா சிட்டி VX(O) — ரூ.10.64 இலட்சம் (பெட்ரோல்)

ஹோண்டா சிட்டி VX(O) — ரூ.11.83 லட்சம் (டீசல்)