இந்திய சாலைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆக உயர்வு

இந்தியாவில் உள்ள எக்ஸ்பிரெஸ் வே சாலைகளில் கார்களை அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் சார்பில் இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வேகத்தை உயர்த்திய அரசு

தற்போது நடைமுறையில் உள்ள வேகத்தை விட சாராசரியாக 20 கிமீ வரையிலான வேகத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

தற்போது எக்ஸ்பிரெஸ் வே சாலைகளில் கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும், தேசிய நெடுஞ்சாலைகளில் வேகம் மணிக்கு 100 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரக சாலைகள் மற்றும் மற்ற சாலைகள் ஆகியவற்றின் வேகம் மணிக்கு 70 கிமீ ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

டாக்சி வாகனங்கள் எக்ஸ்பிரெஸ் வே சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய வேகம் மணிக்கு 80 கிமீ, தேசிய நெடுஞ்சாலைகளில் வேகம் மணிக்கு 90 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரக சாலைகள் மற்றும் மற்ற சாலைகள் ஆகியவற்றின் வேகம் மணிக்கு 70 கிமீ ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

சரக்கு வாகனங்கள் வேகம் எக்ஸ்பிரெஸ் வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  ஊரக சாலைகள் மற்றும் மற்ற சாலைகள் ஆகியவற்றின் வேகம் மணிக்கு 60 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிள் வேகம் அதிகபட்சமாக எக்ஸ்பிரெஸ் வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   ஊரக சாலைகள் மற்றும் மற்ற சாலைகள் ஆகியவற்றின் வேகம் மணிக்கு 60 கிமீ ஆக(முந்தைய வேகம் 40 கிமீ)  வரையறுக்கப்பட்டுள்ளது.

குவாட்ரிசைக்கிள் மற்றும் ஆட்டோ போன்றவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆகும். வரையறுக்கப்பட்டுள்ள வேகத்தை விட 5 சதவித கூடுதலான வேகத்தில் இயக்கினால் குற்றமல்ல என மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 183 யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மித வேகம் மிக நன்று

Recommended For You