2016 ஆடி ஏ4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்

0

ஆடி நிறுவனத்தின் 2016 ஆடி ஏ4 சொகுசு செடான் கார் 38.10 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  முதலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆடி ஏ4 சொகுசு செடானில்  1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டு 148 பிஹெச்பி பவர் , 250 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.  இதில் 7 வேக ஸ்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. 0 முதல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதற்க்கு 8.5 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் ஆடி A4 காரின் உச்சபட்ச வேகம் ஒரு மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

Google News

முந்தைய மாடலை காட்டிலும் ஆற்றல் குறைந்திருந்தாலும் 43% கூடுதல் எரிபொருள் திறன் கொண்டுள்ளதால்,  ஏ4 கார் ஒரு லிட்டருக்கு 17.84 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் பல மாறுதல்களை பெற்றுள்ள முகப்பில் நேரத்தியான எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய எல்இடி விளக்குகளுடன் பாரம்பரிய ஆடி கிரில் போன்றவற்றுடன் மிக நேரத்தியான வடிவமைப்பினை பெற்றுள்ளது. பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்  பின்புறத்திலும் எல்இடி டெயில் விளக்குகள் பெற்றுள்ளது.

உட்புறத்தில் மிக நேர்த்தியாக ஃபினிஷ் செய்யப்பட்ட டேஸ்போர்டு, இருக்கைகள் மற்றும் பல நவீன வசதிகளை டாப் வேரியண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிர்லியன்ட் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டு , தொடுதிரை அமைப்பில் நேவிகேஷன் , MMI  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ,ஸ்மார்ட்போன் செயல்பாட்டுக்கான ஆதரவு என பலவற்றை கொண்டுள்ளது. 8 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் கேமராக்கள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை புதிய ஆடி ஏ4 கார் பெற்றுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்இ, பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் சி-கிளாஸ் போன்ற கார்களுடன் ஆடி A4 கார் சந்தையை பகிர்ந்துகொள்கின்றது.

புதிய ஆடி ஏ4 கார் விலை

2016 Audi A4 Plus  – ₹. 38.10 லட்சம்

2016 Audi A4 Technology – ₹. 41.20 லட்சம்

(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை )