2016 ஹோண்டா அமேஸ் விற்பனைக்கு வந்தது

0

புதிய ஹோண்டா அமேஸ் கார் ரூ.5.30 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில தோற்ற மாற்றங்களுடன் உட்புறத்தில் டேஸ்போர்டு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

honda-amaze-facelift

வெளிதோற்றத்தில் முகப்பில் மிக அகலமான க்ரோம் பட்டை கிரிலுடன் பம்பர் முகப்பு விளக்கு போன்றவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பின்புற பம்பர் மற்றும் புதிய டெயில் விளக்குகள் போன்றவை புதிதாக வந்துள்ளது. பக்கவாட்டில் புதிய அலாய் வீல் மற்றும் கூடுதலாக நீல வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.

2016 ஹோண்டா அமேஸ் காரின் உட்புறத்தில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டு மற்றும் சென்ட்ரோல் கன்சோலை பெற்றுள்ளது. புதிய ஆடியோ சிஸ்டம் , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , புதிய ஸ்டீயரிங் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.

99 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. ஹோண்டா அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.8 கிமீ ஆகும்.

87 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்சும் உள்ளது. ஹோண்டா அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 17.8 கிமீ மற்றும் 18.1 கிமீ (சிவிடி) ஆகும்.

புதிய ஹோண்டா அமேஸ் விலை

பெட்ரோல்

  •  E-MT –ரூ. 5.30 லட்சம்
  •  S-MT – ரூ. 5.95 லட்சம்
  •  SX-MT – ரூ. 6.80 லட்சம்
  •  VX-MT – ரூ. 7.20 லட்சம்
  •  S-CVT – ரூ. 7.20 லட்சம்
  •  VX-CVT – ரூ. 8.20 லட்சம்

டீசல்

  • E-MT – ரூ. 6.42 லட்சம்
  •  S-MT – ரூ. 7.30 லட்சம்
  • SX-MT – ரூ. 7.82 லட்சம்
  • VX-MT – ரூ. 8.20 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }