2017 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் அறிமுகம்

0

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் நாட்டில் 2017 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய மாருதி ஸ்விஃப்ட் 2017ஆம் வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

2017 maruti suzuki Swift

Google News

வருகின்ற ஜனவரி 4 முதல் முதன்முறையாக ஜப்பானில் விற்பனைக்கு செல்ல உள்ள சுஸூகி ஸ்விஃப்ட் கார் சர்வதேச அளவில் ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிக்கு வரவுள்ளதை தொடர்ந்து இந்தியாவில் மாருதி சுஸூகி டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளது.

ஸ்விஃப்ட் டிசைன்

முந்தைய தலைமுறை மாடலில் இருந்து மாறுபட்ட காராக பலேனோ தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்விஃப்ட் கார் தன்னுடைய பாரம்பரிய தோற்ற பொலிவினை பராமரித்து கொண்டே புதிய வடிவ அமைப்புகளை பெற்றுள்ளது.

2017 maruti Swift

முன்பக்க கிரில் ,பம்பர் ,பானெட் தோற்ற அமைப்பு , ஹெட்லைட் , பனிவிளக்குகள் போன்றவை முந்தைய மாடல்களில் இருந்து மாறுபட்டு நவீன தோற்ற கிரில் பெற்று அசத்தலான எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளை கொண்டு அசத்தியுள்ளது.

பக்கவாட்டில் ஏ, பி , சி என மூன்று பில்லர்களுமே கருப்பு நிற பூச்சினை பெற்று மிதக்கும் பிரமையை வெளிப்படுத்தும் மேற்கூறையை பெற்றுள்ளது. மேலும் பீட் , கேயூவி100 கார்களில் அமைந்திருப்பதனை போன்ற பின்புற கதவுகளுக்கான கைப்பிடி பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளது.பின்புறத்தில் எல்இடி டெயில் லேம்பை பெற்றுள்ளது.

இன்டிரியர்

புதுப்பிக்கப்பட்ட மிக சிறப்பான டேஸ்போர்டு அமைப்புடன் புதிய இரட்டை பிரிவு இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , நேவிகேஷன் , ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்றவற்றை பெற்றதாக விளங்கும்.

மாருதி ஸ்விஃப்ட் எஞ்சின்

ஜப்பானிய சந்தையில் எஸ்விஹெச்எஸ் ஹைபிரிட் மற்றும் ஸ்போர்ட்டிவ் மாடலான ஆர்எஸ் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இடம்பெற உள்ள டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களில் விற்பனையில் உள்ள மாடல்களில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் K வரிசை பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அல்லது மாருதி புதிதாக உருவாக்கி வரும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இரு எஞ்சின் ஆப்ஷனிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் (AGS – Auto Gear Shift) அதாவது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் ஒன்றுக்கு மேற்பட்ட வேரியன்டில் கிடைக்கலாம்.

மேலும் இந்திய சந்தையில் விரைவில் விற்பனையில் வரவுள்ள மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் இடம்பெற உள்ள அதே 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜினை பெற்ற மாடல் ஸ்விஃப்ட் ஆர்எஸ் காரிலும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் வருகை

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிக்கு சர்வதேச அரங்கில் வரவுள்ள 2017 சுஸூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் 2017 ஆம் வருடத்தின் ஏப்ரல் அல்லது அதன் பிறகு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

2017 மாருதி ஸ்விஃப்ட் படங்கள்