2017 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் படங்கள் கசிந்தது

0

அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை 2017 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் படம் இணையத்தில் கசிந்துள்ளது. மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்துடன் நவீன டிசைன் தாத்பரியத்தை பெற்றுள்ளது.

2017 maruti suzuki Swift Leaked

Google News

பலேனோ காரின் வடிவ தாத்பரியங்களை அடிப்படையாக கொண்டு பிரசத்தி பெற்ற ஸ்விஃப்ட் காரின் அதே தோற்ற அமைப்பில் அமைந்திருந்தாலும் முகப்பில் மிக சிறப்பான மாற்றத்தை கண்டுள்ளது.  குறிப்பாக முன்பக்கத்தில் அமைந்துள்ள புதிய அறுங்கோண வடிவிலான கிரில் மிதக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலான கருப்பு வண்ணத்தை பெற்ற சி பில்லர் , பின்புற கதவின் கைப்பிடி பீட் மற்றும் கேயூவி100 கார்களில் அமைந்துள்ளதை போன்று ஜன்னலுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.

புதிய ஸ்டைலிசான முகப்பு விளக்கு மற்றும் பகல் நேர எல்இடி விளக்கினை பெற்றுள்ளது. மேலும் அகலமான கருப்பு வண்ண அறையில் அமைந்துள்ள சிறிய வட்ட வடிவ பனி விளக்கினை கொண்டுள்ளது. மேலும் டைமன்ட் கட் அலாய் வீல் ஆப்ஷனை கொண்டிருக்கும்.

2017 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் என்ஜின்

இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் சோதனை ஓட்டம் இந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக வரவுள்ள இரு கார்களிலும் வழக்கம் போல 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் அல்லது அதற்கு மாற்றாக மாருதி தயாரித்து வரும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர புதிய ஸ்விஃப்ட் காரில் ஸ்போர்ட்டிவ் மாடலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

image source : Ferdfanpage