2017 ஹூண்டாய் வெர்னா கார் டீசர் வெளியீடு..!

அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு வரவுள்ள மற்றொரு மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2017 புதிய ஹூண்டாய் வெர்னா வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில் முதல் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது.

2017 ஹூண்டாய் வெர்னா

சர்வதேச அளவில் சில நாடுகளில் மேம்படுத்தப்பட்ட புதிய வெர்னா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தியசாலைகளிலும் சில மாதங்களாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வெர்னா காரின் வருகையை ஆகஸ்ட மாத தொடக்க வாரங்களில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் டீசர் படத்தை சமூக வலைதளங்களில் இந்தியா ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

சில நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சோலாரீஸ் மற்றும் அசென்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற வெர்னா காரில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய அடிச்சட்டத்துடன் கூடுதலான நீளம் மற்றும் அகலம் போன்றவற்றை பெற்றிருக்கும் என்பதனால் சிறப்பான வீல்பேஸ் கொண்டு தாரளமான இடவசதியுடன், பல்வேறு நவீன வசதிகள் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் வெளியான எலன்டரா காரின் தோற்ற உந்துதல் மற்றும் இன்டிரியர் வசதிகள் போன்றவற்றை கொண்டதாக இருக்கலாம், குறிப்பாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றை பெற்ற 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றிருக்கலாம்.

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வெர்னா கார் மிகுந்த சவாலான செடான் ரக மாடல்களான சிட்டி, சியாஸ், ரேபிட் போன்றுவற்றுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

Recommended For You