2017 ஹோண்டா சிட்டி கார் விலை , நுட்ப விபரம்…மேலும் பல..

0

இந்தியாவில் 2017 ஹோண்டா சிட்டி கார் ரூபாய் 8,49,990 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் வகைகளில் கூடுதலாக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.

2017 honda city facelift

Google News

2017 ஹோண்டா சிட்டி கார்

நவீன சிவிக் காரின் டிசைன் தாத்பரியங்களை பெற்று மிக நேர்த்தியான க்ரோம் பூச்சூ கிரிலை பெற்று அதன் மத்தியில் ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.  புதிய தோற்றத்தை வெளிப்படுத்த இணைக்கப்பட்டுள்ள டாப் வேரியன்டில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்  , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , எல்இடி பனி விளக்குகள் , காரின் பக்கவாட்டில் முந்தைய 15 அங்குல அலாய் வீலுக்கு மாற்றாக புதிய வடிவம் கொண்ட 16 அங்குல அலாய் வீல் , நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்களுடன் எல்இடி நிறுத்த விளக்குகள் அமைப்பினை பின்புறத்தில் பெற்று விளங்குகின்றது.

Honda City front

2017 Honda City headlamps

S, SV, V, VX, மற்றும் ZX என 5 விதமான வேரியன்டில் இடம்பெற்றுள்ள புதிய சிட்டி காரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ZX வேரியன்டில் பல்வேறு விதமான கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

மேம்பாடுகளை கொண்ட இருக்கை மற்றும் டேஸ்போர்டில் புதிய 6.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

2017 honda city facelift led taillamp

2017 ஹோண்டா சிட்டி எஞ்சின்

1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலே பவர் மற்றும் டார்க் போன்வற்றில் மாற்றம் இல்லாமல் வந்துள்ளது.

100 ps பவருடன் , 200 Nm டார்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC  டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.6 கிமீ ஆகும்.

119 ps பவருடன் , 145 Nm டார்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-VTEC  பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 17.4 கிமீ ஆகும்.

 

2017 ஹோண்டா சிட்டி விலை பட்டியல்

2017 ஹோண்டா சிட்டி வேரியன்ட்  பெட்ரோல்  டீசல்
S ரூ. 8,49,990
SV ரூ. 9,53,990 ரூ. 10,75,990
V ரூ. 9,99,990  ரூ. 11,55,990
VX ரூ. 11,64,990 ரூ. 12,86,990
ZX ரூ. 13,56,990
V (CVT) ரூ. 11,53,990  –
VX (CVT) ரூ. 12,84,990  –
ZX (CVT) ரூ. 13,52,990  –

( அனைத்து டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

[foogallery id=”16453″]