2017 ஹூண்டாய் எக்ஸென்ட் விற்பனைக்கு களமிறங்கியது

மேம்படுத்தப்பட்ட 2017 ஹூண்டாய் எக்ஸென்ட் காம்பேக்ட் ரக செடான் கார் ரூ. 5.38 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய 1.2லிட்டர் டீசல் எஞ்சினை பெற்றதாக எக்ஸென்ட் வந்துள்ளது.

2017 ஹூண்டாய் எக்ஸென்ட்

  • முந்தைய 1.1 லிட்டர் டீசலுக்கு மாற்றாக புதிய 1.2 லிட்டர்டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது.
  • முகப்பு மற்றும் பின்புற தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக வந்துள்ளது.
  • 5 விதமான நிறங்களில் எக்ஸென்ட் கார் கிடைக்க உள்ளது.

எக்ஸென்ட் செடான் ரக காரில் முந்தைய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு மாற்றாக கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்ட புதிய 1.2 லிட்டர் டீசல்  75 hp மற்றும் 171Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் புதிய கிராண்ட் ஐ10 காரில் இடம்பெற்றுள்ளது. புதிய டீசல் எஞ்சின் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தரவல்லதாகும்.

இதன்  1.2 லிட்டர் கப்பா எஞ்சின் மாடல்  82 bhp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மேலும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கின்றது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 20.14கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 17.36கிமீ ஆகும்.

முன்பக்க வடிவ அமைப்பில் புதிய எலன்ட்ரா காரின் தாத்பரிங்களை பெற்று அகலமான அறுங்கோன வடிவ கிரில் , படுக்கை நிலையான பனி விளக்கு போன்றவற்றுடன் வந்துள்ள எக்ஸென்ட் காரின் பின்புற வடிவ அமைப்பில் மேம்படுத்தப்பட்ட புதிய பம்பர் அமைப்பு , பூட் மற்றும் டெயில் விளக்கை பெற்றிருப்பதுடன் பக்கவாட்டில் புதிய டிசைன் கொண்ட டைமன்ட் கட் அலாய் வீல் இடம்பெற்றுள்ளது.

இன்டிரியரில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ சாட்டிலைட் நேவிகேஷன்  மிரர் லிங்க் உள்பட டேஸ்போர்ட் மற்றும் இருக்கையில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். பாதுகாப்பு அம்சங்களான முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் ,ரிவர்ஸ் கேமரா போன்றவற்றையும் பெற்று விளங்குகின்றது.

மாருதி சுஸூகி டிஸையர், ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ போன்ற கார்களுடன் பல முனைப் போட்டியை எக்ஸென்ட் சந்திக்கின்றது.

2017  எக்ஸென்ட் விலை பட்டியல்
வேரியன்ட் பெட்ரோல் டீசல்
E ரூ. 5,38,381 ரூ.6,28,281
E+ ரூ.5,93,265 ரூ.6,83,165
S ரூ.6,29,254 ரூ.7,19,154
SX ரூ.6,73,765 ரூ.7,63,667
SX (O) ரூ.7,51,772 ரூ.8,41,670
S AT ரூ.7,09,916

Recommended For You