இந்தியாவில் 2017 மாருதி எஸ் – கிராஸ் முன்பதிவு நடைபெறுகின்றது

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரிமியம் ரக நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்படுகின்ற மாருதி எஸ் -கிராஸ் க்ராஸ்ஓவர் ரக மாடலின் மேம்படுத்தப்பட்ட காருக்கு நெக்ஸா வழியாக நாடு முழுவதும் உள்ள டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கியுள்ளது.

2017 மாருதி எஸ் – கிராஸ்

முந்தைய மாடலை விட கூடுதலாக தோற்ற மாற்றங்கள் வசதிகள் மற்றும் கேபினில் பிரிமியம் அம்சங்கள் இணைக்கப்பட்டு புதிய மாருதி எஸ் – க்ராஸ் வரவுள்ளது. குறிப்பாக முந்தைய மாடலில் இடம்பெற்றிருந்த சக்திவாய்ந்த DDiS 320 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை முற்றிலும் மாருதி நீக்கியுள்ளது.

தற்போது எஸ் -கிராஸ் SHVS சிஸ்டத்துடன் கூடிய 1.3 லிட்டர் DDiS 200 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 89 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மாருதி எஸ்-கிராஸ் மைலேஜ் லிட்டருக்கு 25.1 கிமீ ஆகும். ஏஎம்டி கியர்பாக்ஸ் தற்போதைக்கு வழங்கப்படவில்லை.

முந்தைய மாடலை விட முகப்பில் மேம்பாடுகளை கொண்ட புதிய 10 ஸ்லாட் கிரில் மற்றும் எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கு, எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் ஆகியவற்றுடன் பக்கவாட்டில் புதிய கருப்பு மற்றும் டைமன்ட் கட் 16 அங்குல அலாய் வீல் இணைக்கப்பட்டிருப்பதுடன், புதிதாக பின்புறத்தில் மேம்படுத்தப்பட்ட எல்இடி டெயில் விளக்குகளை கொண்டுள்ளது.

முந்தைய மாடலை விட கேபின் சிறப்புமிக்க வகையில் மேம்படுத்தப்பட்ட உயர்தர இருக்கை, கருப்பு நிற கேபின் ஆகியவற்றுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடியதாக வரவுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 280 நெக்ஸா டீலர்கள் வாயிலாக மாருதி எஸ்-க்ராஸ் காருக்கு ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.. அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Recommended For You