ரூ.8.49 லட்சத்தில் மாருதி சுசூகி எஸ்-கிராஸ் விற்பனைக்கு அறிமுகம்

0

maruti suzuki s cross faceliftஇந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளை கொண்ட புதிய மாருதி சுசூகி எஸ்-கிராஸ் கார் மாடலை ரூ.8.49 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

மாருதி சுசூகி எஸ்-கிராஸ்

2017 Maruti S Cross

முந்தைய 1.6 லிட்டர் எஞ்சின் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் ஹைபிரிட் ஃப்ரம் சுசூகி என அழைப்படுகின்ற SHVS நுட்பத்தை பெற்ற 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. DDiS 200 பேட்ஜ் பெற்ற இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 200 என்எம் வரை டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சிறப்பான வகையில் எரிபொருளை சேமிக்கும் திறன் பெற்ற எஸ்ஹெச்விஎஸ் நுட்பத்தை பெற்ற மாருதி எஸ் -கிராஸ் மைலேஜ் லிட்டருக்கு 25.1 கிமீ ஆகும்.

முகப்பில் 10 செங்குத்தான ஸ்லாட் பெற்ற கிரிலுடன் கூடிய எஸ் க்ராஸ் மாடலில் எல்இடி உடன் கூடிய புராஜெக்டர் முகப்பு விளக்கு, பகல் நேர ரன்னிங் விளக்கு ஆகியவற்றுடன் பக்கவாட்டில் 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் மற்றும் எல்இடி டெயில் விளக்கினை பின்புறத்தில் பெற்றுள்ளது.

2017 Maruti S Cross side

எஸ்-க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கருமை நிறுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கேபினுடன் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

மாருதி சுசூகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் விலை பட்டியல்
வேரியன்ட் எகஸ்-ஷோரூம் டெல்லி விலை
S-Cross Sigma ரூ.8,49,000
S-Cross Delta ரூ.939,000
S-Cross Zeta ரூ.9,98,000
S-Cross Alpha ரூ.11,29,000

2017 Maruti S Cross rear

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 95 சதவீத ரூ.100 கோடி வரை முதலீட்டில் எஸ் க்ராஸ் காருக்கு உற்பத்தி திட்டங்களை செயற்படுத்தி உள்ளதால் தற்போது எஸ் கிராஸ் காருக்கு உதிரிபாகங்கள் 95 சதவீதம் வரை உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட்டுகின்றது.

2017 Maruti S Cross rear view