2017 டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் X எடிசன் அறிமுகம்

0

2017 Toyota Etios Cross X Editionக்ராஸ்ஓவர் எட்டியோஸ் க்ராஸ் மாடலில் கூடுதல் வசதிகளை பெற்ற 2017 டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் X எடிசன் ரூ.6.79 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2017 டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் X எடிசன்

toyota etios cross x front view

எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்ட க்ராஸ்ஓவர் ரக எட்டியோஸ் க்ராஸ் மாடலை பின்னணியாக கொண்டு சிறப்பு வசதிகளை பெற்ற எட்டியோஸ் க்ராஸ் X எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்சின் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

X எடிசன் மாடலில் தோற்ற அமைப்பில் சிறப்பு பிரவுன் நிறத்துடன் கூடுதலாக முகப்பில் பனி விளக்கு அருகில் பெசல் பெற்றதாக, கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் முகப்பு கிரில் ஆகியவற்றுடன் நேர்த்தியான X எடிசன் பேட்ஜ் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அலாய் வீல் ஆகியவற்றுடன் இன்டிரியரில் சில குறிப்பிதக்க வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

Etios Cross X Edition main

குறிப்பாக கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொண்டுக்கப்பட்ட கேபினில் கார்பன் ஃபைபர் ஃபினிஷ், புதிய இருக்கை கவர், 6.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, ஏபிஎஸ் , இபிடி ஆகியவை அடிப்படை பாதுகாப்பு கருவிகளாக கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள ஃபியட் அவென்ச்சூரா, போலோ க்ராஸ், மற்றும் ஹூண்டாய் ஐ 20 ஏக்டிவ் மாடல்களுக்கு சவாலாக எட்டியோஸ் க்ராஸ் X எடிசன் விளங்குகின்றது.

2017 Toyota Etios Cross X Edition dashboard Toyota Etios Cross X Edition Space