2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD ஸ்போர்ட்டிவோ விரைவில்

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர்  எஸ்யூவி காரின் ஃபார்ச்சூனர் TRD ஸ்போர்ட்டிவ் மாடல் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரசத்தி பெற்ற பிரிமியம் ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்திய மட்டுமல்லாமல் பல நாடுகளில் சிறந்த எஸ்யூவி மாடலாகும்.

2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD ஸ்போர்ட்டிவோ

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் புதிய 2.8 லிட்டர் என்ஜின் ஆப்ஷனுடன் பல தரப்பட்ட நவீன வசதிகளுடன் நேர்த்தியான நவீன டிசைன் தாத்பரியத்துடன் தொடர்ந்து கம்பீரத்தை தக்கவைத்துள்ளது.

சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் தோற்ற மாற்றங்களை பலவற்றை கொண்டுள்ளது. குறிப்பாக ஸ்போர்ட்டிவ் முன் , பின் பம்பர்கள் , 20 இஞ்ச் கருப்பு வண்ண ஸ்போர்ட்டிவ் வீல் , இரட்டை வண்ண கலவை மேற்கூறையில் கருப்பு வண்ணம் , டிஆர்டி ஸ்போர்ட்டிவ் பேட்ஜ் , கதவு சில்ஸ் ,  புகைப்போக்கி மஃப்லர் போன்றவற்றை பெற்றுள்ளது.

உட்புறத்தில் டிஆர்டி ஸ்போர்ட்டிவ் இன்ஸ்டூர்மெண்ட் கிளஸ்ட்டர் , 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவை இருக்கைகள் , டிஆர்டி ஸ்போர்ட்டிவோ மிதியடிகள் போன்ற சில மாற்றங்களை கொண்டுள்ளது.

ஸ்போர்ட்டிவோ தன்மையை பெறும் வகையில் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் அமைப்புகள் மட்டுமே மாற்றங்கள் பெற்றுள்ளன. 175 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் புதிய 2.8 லிட்டர் GD டீசல் என்ஜினை பெற்றுள்ளது. 6 வேக தானியங்கி கியர்பாக்சினை பெற்றுள்ளது.

2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD (TRD stands for Toyota Racing Development) ஸ்போர்ட்டிவோ எஸ்யூவி கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.

Recommended For You