2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவில் பிரிமியம் ரக எஸ்யூவி சந்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ரூ.92.60 லட்சம் ஆரம்பவிலையில் மேம்படுத்தப்பட்ட 2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ

மேம்படுத்தப்பட்ட மாடலாக கடந்த வருடம் நடைபெற்ற பிராங்கஃபர்ட் மோட்டார் ஷோ கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட பிராடோ எஸ்யூவி , இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காசியில் வெளியானதை தொடர்ந்து, தற்போது இந்தியாவில்  விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Google News

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் லேண்ட் க்ரூஸர் எல்சி200 ஆகிய இரு மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பிராடோ எஸ்யூவி காரில் புதுப்பிக்கப்பட்ட ஹூட், கிரில், புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்களுடன் எல்இடி டெயில் லைட் ஆகியவற்றுடன் வந்துள்ளது. இன்டிரியர் அமைப்பில், மேம்படுத்தப்பட்ட 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இருக்கை அமைப்பு ஆகியவற்றை புதுப்பித்துள்ளது.

இந்தியாவில் 2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி மாடலில் 170 ஹெச்பி ஆற்றல் மற்றும் 410 என்எம் இழுவைத் திறன் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆல்  வீல் டிரைவ் கொண்ட இந்த மாடல் கம்ஃபோர்ட் நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி விலை ரூ. 92.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)