ரூ.15.51 லட்சத்தில் புதிய இசுசூ V-Cross விற்பனைக்கு வந்தது

0

Isuzu V-Cross facelift

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இசுசூ V-Cross பிக்கப் டிரக் மாடல் பல்வேறு புதிய மேம்பாடுகளுடன் இரண்டு புதிய நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு ரூபாய் 15.51 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

Google News

இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்க உள்ள வி கிராஸ் பிக்கப் டிரக்கில் தொடர்து பிஎஸ் 4 என்ஜின் பொருத்தப்பட்டு 2.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகபட்சமாக 134bhp பவர் 320Nm டாப் டார்க் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ்களுடன் உயர் திறன் கொண்ட மாடல் 4WD கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்.

இசுசூ V-Cross சிறப்புகள்

புதிதாக வந்துள்ள டி-மேக்ஸ் அடிப்படையிலான வி-கிராஸ் பல்வேறு வெளிப்புற ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டுள்ளது. குறிப்பாக புதிய பை-எல்இடி ஹெட்லேம்ப்கள், மூடுபனி விளக்குகளில் குரோம் கொடுக்கப்பட்டுள்ளது.  புதிய 18 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்கள் பெற்றுள்ளது. இந்த பிக்கப் டிரக் சபையர் ப்ளூ மற்றும் சில்கி பேர்ல் ஒயிட் , ரூபி ரெட், டைட்டானியம் சில்வர், அப்சிடியன் கிரே, காஸ்மிக் பிளாக் மற்றும் ஸ்பிளாஸ் வைட் போன்ற நிறங்களில் கிடைக்க உள்ளது.

கருப்பு நிறத்திலான இண்டிரியர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள்,  இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் கியர் ஷிப்ட் இன்டிகேட்டர், இரண்டாவது வரிசையில் ஒரு யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் மற்றும் கேபினில், கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ போன்றவற்றையும், 7.0 அங்குல இன்போடெயின்மென்ட் தொடுதிரை கொண்டு யூ.எஸ்.பி இணைப்பு, டிவிடி, ஆக்ஸ், ஐபாட் மற்றும் புளூடூத் ஆதரவை பெற்றுள்ளது.

Isuzu V-Cross

இந்தியாவில் உள்ள அனைத்து இசுசூ டீலர்கள் வாயிலாக  முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இசுசூ வி கிராஸ் ஸ்டாண்டர்டு கிரேடு ரூ.15.51 லட்சம் மற்றும் டாப் இசட் கிரேடு 17.03 லட்ச ரூபாய் என மும்பை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Isuzu V-Cross facelift Isuzu V-Cross facelift