ரூ.1.56 கோடி விலையில் ஆடி A8 L விற்பனைக்கு வெளியானது

0

audi a8 l

வோக்ஸ்வேகன் குழுமத்தின் முதல் மீடியா இரவு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆடி ஏ8 எல் கார் (Audi A8 L) ஆடம்பர வசதிகளை பெற்ற உயர் ரக செடான் மாடலாக ரூ.1.56 கோடியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Google News

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை பெற்ற 55 TFSi வேரியண்டில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ஆடம்பர அம்சங்களை பெற்றதாக விளங்குகின்றது.

ஏ8 எல் காரில் வழங்கப்பட்டுள்ள 3.0 லிட்டர் டர்போசார்ஜ் வி6 பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 340 ஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தில் இருந்து 5.7 வினாடிகளில் செல்லும் திறன் கொண்டுள்ளது. கூடுதலாக ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது. பவர் ட்ரெயினில் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் பெல்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் 10Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டுள்ளது. இந்த ஹைபிரிட் அமைப்பின் மூலம் வாகனத்தை 55-160 கிமீ வேகத்தில் அனுமதிக்கிறது, என்ஜின் அனைத்த பின்னர் 40 விநாடிகள் வரை பயணிக்க உதவுகின்றது. அந்த வகையில், இந்த தொழில்நுட்பம் 100 கிமீ பயணத்தில் 0.7 லிட்டர் வரை பெட்ரோலை  சேமிக்க இயலும் என ஆடி நிறுவனம் கூறுகிறது.

இன்டிரியரில் டேஷ்போர்டில் நேவிகேஷனை கட்டுப்படுத்த 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கூடுதலாக மீடியா பயன்பாடிற்கு 8.6 அங்குல டிஸ்பிளே உள்ளது. ஏசி கட்டுப்பாடு மற்றும் இருக்கை செயல்பாடுகளை கொண்டுள்ளது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, 8 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்‌ஷன் கட்டுப்பாடு, ஈஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் 3d வியூ மற்றும் சரவுண்ட் வியூ கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.

Audi A8L Rear

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்ஜே எல் மற்றும் லெக்ஸஸ் எல்எஸ் 500 எச் போன்றவற்றை ஆடி ஏ8 எல் எதிர்கொள்ளுகின்ற நிலையில் இதன் விலை ரூ.1.56 கோடியாகும்.