ரூ.1.94 கோடி விலையில் ஆடி RS7 ஸ்போர்ட்பேக் விற்பனைக்கு அறிமுகம்

0

Audi RS7 Sportback

ஆடம்பர கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனத்தின் RS7 ஸ்போர்ட்பேக் மாடலின் இரண்டாம் தலைமுறை விலை ரூ.1.94 கோடி ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

மணிக்கு அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தை இலகுவாக எட்டும் திறனாக வரையறுக்கப்பட்ட 4.0 லிட்டர் ட்வீன் டர்போ சார்ஜ்டு V8 சிலிண்டர் கொண்ட ஆர்எஸ்7 காரில் 48-வோல்ட் மைல்ட் ஹைபிரிட் ஆப்ஷனும் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் அதிகபட்ச பவர் 600 ஹெச்பி மற்றும் 800 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 8 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக ஆடியின் குவாட்ரோ (quattro) ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இணைந்துள்ளது.

0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.6 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும். ஆடி ஆர்எஸ்7 மாடலில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள டைனமிக் பேக் மூலம் மணிக்கு 280 கிமீ மற்றும் டைனமிக் பிளஸ் மூலமாக மணிக்கு 305 கிமீ வரை எட்டும் திறனை கொண்டுள்ளது.

2020 Audi RS7 Interior

மிக சிறந்த ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ள ஆடி ஆர்எஸ்7 காரில் உள்ள மிகச் சிறப்பான மேட்ரிக்‌ஷ் எல்இடி ஹெட்லைட், 21 அங்குல அலாய் வீல் கூடுதலாக 22 அங்குல அலாய் வீல் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. பல்வேறு உயர் தரமான ஆடம்பர வசதிகளை கொண்டதாக டூயல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆகியவற்றுடன் இன்டிரியர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடி RS7 ஸ்போர்ட்பேக் விலை ரூபாய் 1.94 கோடி (எக்ஸ்ஷோரூம் இந்தியா)