மார்ச் 5.., ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விற்பனைக்கு அறிமுகம்

0

honda Africa twin

வரும் மார்ச் 5 ஆம் தேதி ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் அட்வென்ச்சர் மாடல் விற்பனைக்கு வெளியாகின்றது. இஐசிஎம்ஏ 2019 அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. சர்வதேச அளவில் ஸ்டாண்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட் இஎஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் பைக்கில் 1,084 சிசி ட்வீன் சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகபட்சமாக 101 பிஹெச்பி பவர் மற்றும் 105 என்எம் டார்க்கை வழங்குகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆறு வேக டிசிடி (இரட்டை கிளட்ச் ஆட்டோமேட்டிக்) டிரான்ஸ்மிஷன் என இரு ஆப்ஷனில் தேர்வு செய்ய இயலும்.

இந்த இரு சக்கர வாகனத்தில் 6.5 அங்குல டி.எஃப்.டி தொடுதிரை உடன் கூடிய அம்சத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அம்சங்களை பெற்றுள்ளது. மேலும், அர்பன், கிராவல், டூர் மற்றும் ஆஃப் ரோடு என நான்கு விதமான ஓட்டுதல் முறை கொண்டுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள மாடல் ரூ.13.50 லட்சத்தில் கிடைத்த நிலையில் புதிய  2020 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன்  கூடுதல் விலையில் அமைந்திருக்கலாம்.