Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது

by MR.Durai
13 February 2020, 12:33 pm
in Car News
0
ShareTweetSend

 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி (hyundai creta) காரை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்டு புதிய போட்டியாளர்களை எதிர்கொள்ளும் திறனை பெற்றுள்ளது.

நடுத்தர எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கிரெட்டா எஸ்யூவி மாடலின் தோற்ற அமைப்பு மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முகப்பில் வழங்கப்பட்டு வந்த கிரில் அமைப்பில் புதிய கேஸ்கேடிங் அமைப்புடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகளும் உள்ளது. அடுத்தப்படியாக பக்கவாட்டினை பொறுத்தவரை புதிய இரட்டை நிறத்திலான அலாய் வீல், மாற்றியமைக்கப்பட்ட வீல் ஆர்சு கொண்டுள்ளது. அதேபோல பின்புறத்தில் விற்பனையில் உள்ள மாடலின் எல்இடி ஹெட்லைட் பெற்றிருப்பதுடன் பம்பரில் சிறிய அளவிலான மாறுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரை ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தவில்லை என்றாலும், சீன சந்தையில் கிடைக்கின்ற ஐஎக்ஸ்25 போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளதாக சில ஸ்பை படங்கள் மூலம் உறுதி செய்யபட்டுள்ளது. மிகவும் அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ப்ளூ லிங்க் டெக்னாலாஜி மூலம் பல்வேறு கனெக்ட்டவிட்டி அம்சங்களை பெற உள்ளது.  மேலும் அடிப்படையான பாதுகாப்பு வசதிகளான ஏபிஎஸ், இபிடி, ஏர்பேக் போன்றவற்றுடன் ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவும் இடம்பெற உள்ளது.

என்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை கியா செல்டோஸ் மாடலில் உள்ள மூன்று என்ஜின்களை இந்த கார் பெற உள்ளது.

புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். கிரெட்டா டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

hyundai creta news in tamil

மிகவும் அபரிதமான வரவேற்பினை பெற்ற முதல் தலைமுறை கிரெட்டா காரின் விலையை விட சற்று கூடுதலாக ரூ.10 லட்சம் முதல் ரூ. 16 லட்சத்திற்குள் வெளியிடப்படலாம். இந்த மாடலுக்கு போட்டியாக கியா செல்டோஸ், எக்ஸ்யூவி 500, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Related Motor News

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

Tags: Hyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

carens clavis price

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan