2020 ஹூண்டாய் வெர்னா காரின் விலை ரூ.9.30 லட்சத்தில் துவங்குகின்றது

0

Hyundai Verna launched

ரூ.9.30 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா காரில் பல்வேறு புதிய வசதிகளுடன் பிஎஸ்6 ஆதரவுடன் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி நுட்பத்தை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.

Google News

முன்புற கிரில் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, எல்இடி ஹெட்லைட் மற்றும் இணைந்த எல்இடி டிஆர்எல் உடன் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் புதிதாக டூயல் டோன் நிறத்தில் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டெயில் லைட் புதுப்பிக்கப்பட்டு, பம்பரும் தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரின் பற்றி எந்த தகவலும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாக நிலையில்,  4.2 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த ப்ளூ லிங்க் டெக்னாலாஜி அம்சத்தைப் பெற்றுள்ளது.

1.0 T-GDI பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 113 bhp பவருடன் 144Nm டார்க் பெற்று 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. அடுத்தப்படியாக 118 bhp பவருடன் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வந்துள்ளது. இறுதியாக, 113 bhp  பவர் மற்றும் 250Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

Hyundai Verna interior

2020 ஹூண்டாய் வெர்னா காரின் விலை பட்டியல்

Variant Prices
1.5 l MPi Petrol MT S Metallic ₹ 930,585
1.5 l MPi Petrol MT SX Metallic ₹ 1,070,389
1.5 l MPi Petrol IVT SX Metallic ₹ 1,195,389
1.5 l MPi Petrol MT SX(O) Metallic ₹ 1,259,900
1.5 l MPi Petrol IVT SX(O) Metallic ₹ 1,384,900
1.0 Turbo GDi Petrol DCT SX(O) Metallic ₹ 1,399,000
1.5 CRDi Diesel  MT S+ Metallic ₹ 1,065,585
1.5 CRDi Diesel  MT SX Metallic ₹ 1,205,389
1.5 CRDi Diesel AT SX Metallic ₹ 1,320,389
1.5 CRDi Diesel  MT SX(O) Metallic ₹ 1,394,900
1.5 CRDi Diesel AT SX(O) Metallic ₹ 1,509,900

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)