2017 ஹூண்டாய் வெர்னா கார் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

0

முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் இன்டிரியர் உள்ளிட்ட அம்சங்களை பெற்ற 2017 ஹூண்டாய் வெர்னா கார் பற்றி இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

2017 hyundai verna car

Google News

2017 ஹூண்டாய் வெர்னா

விற்பனையில் உள்ள மாடலை விட மாறுபட்ட தோற்ற அமைப்பினை பெற்று கூடுதலாக செயல்திறன் மிக்க காராக மாறியுள்ள வெர்னாவின் இன்டிரியர் அமைப்பிலும் கூடுதலான வசதிகள் மற்றும் தாரளமான இடவசதியை பெற்றதாக வந்துள்ளது.

சர்வதேச அளவில் 66 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற வெர்னா இதுவரை 8.8 மில்லியன்க கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய சந்தையில் மட்டும் 3.17 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

hyundai verna

டிசைன்

புதிய டிசைனிங் பெற்ற வெர்னா காரில் மிக நேர்த்தியான முகப்பு தோற்றத்தை பெற்று எலன்டாரா காரின் உந்துதலை பெற்றதாக வந்துள்ளது. K2 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வெர்னா மாடலில் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்தாக எல்இடி முகப்பு புராஜெக்டர் விளக்குகளுடன் கூடிய இந்த காரில் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் 16 அங்குல அலாய் வீல் ஆப்ஷனை கொண்டிருக்கின்றது.

Dimensions ஹூண்டாய் வெர்னா
நீளம் 4,440 mm
அகலம் 1,729 mm
உயரம் 1,475 mm
வீல்பேஸ் 2,600 mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 mm

hyundai verna dashboard

இன்டிரியர்

நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன் போன்றவற்றை இணைக்கும் வகையில் ஆதரவினை பெற்ற 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய டேஸ்போர்டு மிக நேர்த்தியான அமைப்பினை பெற்றிருக்கும்.

NVH குறைக்கப்பட்டு 65 மிமீ வரை நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதலான இடவசதியுடன் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களுடன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவற்றை பெற்றுள்ளது.

Next Generation Hyundai Verna Unveiled K2 chassis platform

எஞ்சின்

123hp பவரை வெளிப்படுத்தும் 1.6 L காமா பெட்ரோல் மற்றும் 128hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 L U2 CRDi டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றுள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மேனுவல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

விபரம்
Hyundai Verna 2017 Petrol Hyundai Verna 2017 Diesel
எஞ்சின் 1,591 cc Gamma Dual VTVT 1,582 cc U2 CRDi
பவர் 123 PS 128 PS
டார்க் 151Nm 260 NM
கியர்பாக்ஸ் 6-speed MT/6-speed AT 6-speed MT/6-speed AT
மைலேஜ் 17.70 km/l (MT)15.92 km/l (AT) 24.75 km/l (MT)21.02 km/l (AT)

பாதுகாப்பு அம்சங்கள்

K2 எனும் புதிய பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெர்னாவில் முந்தைய மாடலை விட 50 சதவிகித கூடுதல் திறன் பாதுகாப்பு மற்றும் கட்டுறுதி (Advanced High Strength Steel – AHSS) சூப்பர் பாடி கட்டுமானத்தை பெற்றுள்ள புதிய வெர்னா காரின் அனைத்து வேரியன்டிலும் இரண்டு காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ்,இபிடி போன்றவை நிரந்தர அம்சமாகவும், உயர்ரக வகையில் 6 காற்றுப்பைகள் பெற்றிருக்கின்றது.

hyundai verna rear

வேரியண்ட்

வெர்னா காரில் மொத்தம் E, EX, SX, SX (O), EX AT, SX+ AT மற்றும் SX (O) AT என மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் கிடைக்கின்றது. ஆரம்ப நிலை E வேரியண்டில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே பெற்றுள்ளது. உயர்க SX (O) வேரியண்டில் மட்டுமே 6 காற்றுப்பைகள் பெற்றுள்ளது.

 

Next Generation Hyundai Verna Unveiled

போட்டியாளர்கள்

மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, வென்ட்டோ மற்றும் ரேபிட்  போன்றவற்றுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக 2017 ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு வரவுள்ளது.

விலை

தற்போது 4000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள புதிய வெர்னா காரின் ஆரம்ப விலை போட்டியாளர்களை விட மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஹூண்டாய் வெர்னா கார் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியல் விபரம்

வேரியன்ட் பெட்ரோல் டீசல்
E ரூ. 7,99,900 ரூ. 9,19,900
EX ரூ. 9,06,900 ரூ. 9,99,900
SX ரூ. 9,49,900 ரூ. 11,11,900
SX (O) ரூ. 11,08,900 ரூ. 12,39,900
EX AT ரூ. 10,22,900 ரூ.11,39,900
SX+ AT ரூ. 12,61,900
SX (O) AT ரூ. 12,23,900