புதிய ஹோண்டா அமேஸ் கார் முன்பதிவு தொடங்கியது

0

இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனம், இன்று முதல் (ஏப்ரல் 6ந் தேதி) மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.21,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மே மாத மத்தியில் அமேஸ் கார் டெலிவரி கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

புதிய ஹோண்டா அமேஸ்

2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக இரண்டாவது தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு மே மாதம் மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது டீலர்கள் வாயிலாக அமேஸ் காருக்கு ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

Google News

புதிய சிட்டி செடான் காரின் தோற்ற உந்துதலை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள அமேஸ் காரில் நேர்த்திமிக்க அகலமான கிரில் அமைப்புடன் புதிய 10 ஸ்போக்குகளை கொண்ட அலாய் வீலை பெற்றதாக உள்ளது. புதிய காரில் கூடுதல் இன்டிரியர் வசதியுடன் அகலமான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றதாக வந்துள்ளது.

விற்பனையில் இடம்பெற்றிருக்கின்ற எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 88ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 100ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என இரு தேர்வுகளிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் , பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸூடன் முதன்முறையாக டீசல் எஞ்சின் மாடலிலும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெறலாம்.

புதிய அமேஸ் காருக்கெதிராக மாருதி டிசையர்,டாடா ஜெஸ்ட், டாடா டீகோர், ஹூண்டாய் எக்ஸென்ட், மற்றும் வரவுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்ட் ஆஸ்பயர் ஆகிய மாடல்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.