கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி அன்பளிப்பாக வழங்கிய ஆனந்த மஹிந்திரா

0

mahindra thar suv first look

இந்தியாவின் இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் உட்பட 6 வீரர்களுக்கு மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா சமீபத்தில் வெளியிடப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசாக வழங்கியுள்ளார்.

Google News

திரு. ஆனந்த மஹிந்திரா தொடர்ச்சியான ட்வீட்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், மேலும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் தீர்மானத்திற்கு அணியைப் பாராட்டினார். பரிசைப் பெறும் இளம் வீரர்களில் முகமது சிராஜ், டி நடராஜன், ஷார்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், சுப்மான் கில் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுளனர். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மஹிந்திரா தார் இன்ஜின்

தார் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 5000 RPM-ல் 150 ஹெச்பி பவர் மற்றும் 1500-3000rpm-ல் 320 என்எம் டார்க் (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 என்எம் டார்க் (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.