பிஎஸ்6 ஃபோக்ஸ்வாகன் போலோ, வென்ட்டோ விற்பனைக்கு வெளியானது

0

Volkswagen Polo bs6

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பிஎஸ்6 என்ஜின் பெற்ற போலோ மற்றும் வென்ட்டோ என இரு கார்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  இப்போது 110 PS பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ என்ஜினை பெற்றுள்ளது.

Google News

குறிப்பாக போலோ காரின் டிரென்ட் லைன், கம்ஃபோர்ட் லைன் மற்றும் ஹைலைன் பிளஸ் வேரியண்டில் இப்போது மேம்பட்ட 1.0 லிட்டர் MPI பெட்ரோல் என்ஜினுடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெறுவதுடன், ஹைலைன் பிளஸ் மற்றும் ஜிடி வேரியண்டுகளில் 110 PS பவர் மற்றும் 175 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது.

அடுத்ததாக, வென்ட்டோ மாடலைப் பொறுத்தவரை 10 PS பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ என்ஜினை பெறுகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது.

குறிப்பாக ஃபோக்ஸ்வாகன் குழுமம் இந்தியாவில் டீசல் என்ஜினை கைவிடுவதனால் 1.5 லிட்டர் TDI டீசல், 1.6 லிட்டர் MPI பெட்ரோல், மற்றும் 1.2 லிட்டர் TSI டர்போ என்ஜினையும் கைவிட்டுள்ளது.

BS6 Polo & Vento price:

மாடல்

Price (ex-showroom)

வேரியண்ட்

போலோ 1.0l MPI 6 MQ

INR 5.82 – 7.80 லட்சம்

TL, CL & HL+

போலோ 1.0l TSI 6 MQ & 6 AQ I

INR 8.02 – 9.59 லட்சம்

HL+ & GT

வென்ட்டோ 1.0L TSI 6 MQ

INR 8.86 – 11.99 லட்சம்

TL, CL, HL & HL+

வென்ட்டோ 1.0L TSI 6 AQ

INR 12.09 – 13.29 லட்சம்

HL & HL+