சிட்ரோன் C3 எஸ்யூவி விலை விபரம் கசிந்தது

0

Citroen C3 suv

ரூ.6.25 லட்சம் முதல் ரூ.8.50 லட்சம் விலையில் விற்பனைக்கு சிட்ரோன் C3 எஸ்யூவி விலை அமையலாம். தற்போது இந்த காருக்கு முன்பதிவு துவங்கிய நிலையில் ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Google News

Common Modular Platform (CMP) என்ற பிளாட்ஃபாரத்தில் வளரும் சந்தைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள சி3 எஸ்யூவி காரில் 100 bhp மற்றும் 160 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். மற்றபடி, இந்த காரில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்பில்லை.

Citroen C3 suv dashboard

பாரம்பரியமான டிசைன் அமைப்பினை பெற்ற பம்பர், லோகோ உடன் மிக நேர்த்தியான பானெட் அமைப்பு வழங்கப்பட்டு, உயரமான வீல் ஆர்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கிராஸ்ஓவர் ஸ்டைல் கார்களை போல அமைந்துள்ள சி3 காரில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஒருங்கிணைப்பு வழங்கப்பட உள்ளது.

Citroen C3 Price

Variant Price
1.2 Petrol Live Rs. 6-6.25 lakhs
1.2 Petrol Feel Rs. 7-7.25 lakhs
1.2 Petrol Feel Vibe Pack Rs. 7.15-7.4 lakhs
1.2 Petrol Feel Dual Tone Rs. 7.15-7.4 lakhs
1.2 Petrol Feel Dual Tone Vibe Pack Rs. 7.3-7.55 lakhs
1.2 Turbo Petrol Feel Dual Tone Vibe Pack Rs. 8.25-8.5 lakhs

All prices, ex-showroom

price source..- rushlane