சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை உற்பத்தி துவக்கம்

பி.எஸ்.ஏ குழுமத்தின் அங்கமான இந்தியாவின் பி.சி.ஏ மோட்டார்ஸ் நிறுவனத்தின் திருவள்ளூர் ஆலையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கான சோதனை உற்பத்தி துவக்கத்தை மேற்கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் நிதி ஆண்டில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ரூ.25-ரூ.30 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற பிரீமியம் எஸ்யூவி மாடலான சி5 ஏர்க்ராஸ் இந்தியாவில் இந்நிறுவனத்தின் முதல் மாடலாக விளங்க உள்ளது. இந்த எஸ்யூவி காரை பொறுத்தவரை பெரும்பாலான பாகங்கள் இறக்குமதி செயப்பட்டு இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான பிரத்தியேக C கியூப்டு திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட உள்ள சி21 காம்பேக்ட் எஸ்யூவி காரின் 90-95 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.7 லட்சம் விலைக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முதற்கட்டமாக வரவுள்ள பிரீமியம் C5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 130 எச்பி பவர் வெளிப்படுத்தும். கூடுதலாக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 180 ஹெச்பி பவரை வழங்கும், இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

முதற்கட்டமாக வெளியிடப்பட உள்ள பிரீமியம் மாடலின் விற்பனைக்கு என பிரத்தியேகமான 10-15 டீலர்களை துவங்க சிட்ரோன் கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version