ஃபோர்டு எண்டேவர்,ஃபோர்ட் கார்,ஃபோர்டு எண்டேவர் விலை,ford endeavour price,ford endeavour suv

2019 ஃபோர்டு எண்டேவர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறிய அளவிலான தோற்ற மாறுதல்களை மட்டும் பெற்று ரூ.28.19 லட்சம் முதல் ரூ.32.97 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் பெறவில்லை.

ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி

இந்திய சந்தையில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 160 PS ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385 Nm ஆகும்.  2 வீல் டிரைவ் கொண்டு 6 வேக மெனுவல் கியர் ஆப்ஷனில் உள்ளது.

200 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 3198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450 என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது. 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

தற்போதைய மாடலின் அடிப்படையில் ஃபேஸ்லிஃப்ட் எண்டேவரில் முன்பக்க பம்பர், கிரில், ஹெடைலைட் அமைப்பு 7 ஏர்பேக்குகள், ஹீல் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் 18 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற டொயோட்டா ஃபார்சூனர், மஹிந்திரா அல்டுராஸ், இசுசூ MU-X, மிட்ஷூபிசி பஜெரோ ஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக ஃபோர்ட் எண்டேவர் விளங்க உள்ளது.

2019 ஃபோர்டு எண்டேவர் விலை பட்டியல்

2.2-litre 4×2 MT Titanium – ரூ. 28.19 லட்சம்
2.2-litre 4×2 AT Titanium – ரூ. 30.60 லட்சம்
3.2-litre 4×4 AT Titanium+ – ரூ. 32.97 லட்சம்