ரூ.1.20 லட்சம் வரை விலை உயர்ந்த ஃபோர்டு எண்டோவர் எஸ்யூவி

0

ford endeavour bs6 1

இந்தியாவின் பிரசத்தி பெற்ற உயர் ரக எஸ்யூவி கார்களில் ஒன்றான ஃபோர்டு சமீபத்தில் விற்பனைக்கு வெளியிட்ட பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற எண்டோவர் மாடலின் விலை ரூ.44,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை உயர்ந்துள்ளது. விலையை தவிர மற்றபடி எந்த வசதிகளும் இல்லை.

Google News

புதிய 2.0 லிட்டர் ஈக்கோ ப்ளூ பிஎஸ்6 என்ஜின் பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற காராக விளங்குகின்றது.  4×4மற்றும்  4×2 என இரண்டிலும் கிடைக்கின்றது.

ஃபோர்டு எண்டோவரின் 4×2 வேரியண்ட் மைலேஜ் ARAI சான்றிதழ் படி லிட்டருக்கு 13.90 கிமீ ஆகும். அதுவே 4X4 மைலேஜ் லிட்டருக்கு 12.4 கிமீ ஆகும்.

சில்வர், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்ககின்ற எண்டோவரில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி தோற்ற அமைப்பு, இன்டிரியரில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வில்லை. இப்போது கூடுதலாக ஃபோர்டு கார்களில் இடம்பெறுகின்ற ஃபோர்டு பாஸ் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது.

Ford Endeavour BS6 Price

Titanium 4×2 AT – ரூ. 29.99 லட்சம்

Titanium+ 4×2 AT – ரூ. 32.75 லட்சம்

Titanium+ 4×4 AT – ரூ. 34.45 லட்சம்

முன்பு அறிவிக்கப்பட்டிருந்த விலை ஏப்ரல் 30 வரை மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.