இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு இந்தியா

0

ford india exit

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது பயணிகள் கார் உற்பத்தியை முழுமையாக இந்தியாவில் நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. சென்னை மறைமலை நகர் மற்றும் சனந்த என இரு ஆலைகளை மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Google News

1994 ஆம் ஆண்டில் இந்தியாவில் நுழைந்த முதல் பண்ணாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம், பிரசத்தி பெற்ற எண்டோவர், ஈக்கோஸ்போர்ட், ஃபிகோ என பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகின்றது. சென்னை மற்றும் சனந்த ஆலையில் ஆண்டுக்கு 4,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு 80,000 வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்யும் நிலையில் அதில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

உற்பத்தி நிறுத்தம்.., ஆனால் விற்பனை தொடரும்..

இந்தியாவில் உள்ள ஆலைகளில் கார்களின் உற்பத்தியை நிறுத்திக் கொள்ள உள்ள நிலையில், சர்வதேச அளவில் இருந்து கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஃபோர்டு திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தியை ஃபோர்டு நிறுத்த உள்ளது.

பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்பாடுகளில் கவனம் தொடர்ந்து செலும்ம உள்ளது. ஃபோர்டின் இரண்டாவது பெரிய ஊதியம் பெறும் பணியாளர்களை கொண்டதாக இந்தியா இருக்கின்ற நிலையில் உற்பத்தியைத் Q2 2022 வரை ஏற்றுமதி செய்வதாகவும் நிறுவனம் அதன் வெளியீட்டின் மூலம் கூறியுள்ளது.

இருப்பினும், ஃபோர்டு சுமார் 4000 ஊழியர்களை வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து நியாயமான தீர்வைத் திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்தியை மூடுவதனால் நிச்சயமாக உரிமையாளர்களர்கள் பாதிப்புகளை எதிர்கொள்ளுவார்கள்.இருந்த போதும் தொடர்ந்து அனைத்து சர்வீஸ் , உதிரிபாகங்கள் வழங்குவதுடன், பெரும்பாலான பிரீமியம் கார்களை இறக்குமதி செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. எனவே, உயர் ரக ஃபோர்டு கார்களை எதிர்பார்க்கலாம்.