எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட் வழங்கப்படும் என்று சாலை போகுவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தனியார் வாகனங்களுக்கு கிரீன் பேக்ரவுண்டில் வெள்ளை நிறத்தில் நம்பர்களும், வர்த்தக வாகனங்களுக்கு கிரீன் பேக்ரவுண்ட்டில் மஞ்சள் நிறத்தில் நம்பர்கள் எழுத்தப்பட்டிருக்கும் என்றும் அமைசகம் தெரிவித்துள்ளது கடந்த மே மாதம் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட் வழங்க அனுமதி அளித்தது.

இதுகுறித்து பேசிய சாலை போகுவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி, எலெக்ட்ரிக் வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்கும் நோக்கிலேயே இந்த நம்பர் பிளேட்கள் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இந்த் வாகனகளுக்கான பார்க்கிங் மற்றும் நெருக்கடியான பகுதியில் செல்ல அனுமதி ஆகியவைகளுடன், டோல் கட்டணத்திலும் இந்த வாகனங்களுக்கு சலுகை அளிக்கப்பட உள்ளது என்றார்.

Recommended For You