ரூ.72,000 வரை ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி செஸ்

ஃபியட் கிறைஸலர் குழுமத்தின் ஜீப் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை ரூ.21 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை உயர்வு

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பிறகு எஸ்யூவி மற்றும் ஆடம்பர சொகுசு கார்கள் வரி குறைந்ததை தொடர்ந்து லட்சங்கள் வரை விலை குறைந்திருந்த நிலையில் மீண்டும் செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு நிறுவனங்களின் கார்கள் மற்றும் எஸ்யூவி விலை உயர தொடங்கியுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி 10 ஆயரத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருக்கின்ற நிலையில் தற்போது ரூ.21 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உயர்ரக ஆடம்பர எஸ்யூவி மாடல்களான கிராண்ட் செராக்கீ, கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மற்றும் ரேங்கலர் மாடல்கள் ரூ. 2.75 லட்சம் முதல் ரூ.6.40 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த குழமத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ, லீனியா மற்றும் அவென்ச்சூரா மாடல்களில் லீனியா மற்றும் அவென்ச்சூரா மாடல்கள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி செஸ் வரி உயர்வு டீலர்கள் வாரியாக மாறுபடும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

தொடர்ந்து நமது மொழியில் ஆட்டோமொபைல் செய்திகளை வாசிக்க எங்களுடைய

ஃபேஸ்புக்கில் பின் தொடர- https://www.facebook.com/automobiletamilan/ 

டிவிட்டரில் பின் தொடர- https://twitter.com/automobiletamil

Recommended For You