தமிழகம் & புதுச்சேரி ஹோண்டா கார்கள் விலை குறைப்பு -ஜிஎஸ்டி

ஹோண்டா கார்ஸ் இந்தியா பிரிவு தங்களுடைய மாடல்களின் விலையை ரூ. 10,000 முதல் ரூ.1.30 லட்சம் வரை குறைத்துள்ளது. ஹைபிரிட் கார் மாடலான ஹோண்டா அக்கார்டு விலை அதிகரிக்கப்பட உள்ளது.

ஹோண்டா கார்ஸ் -ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வருகைக்கு பின்னர் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் ஹோண்டா இந்தியா பிரிவு தங்களுடைய ஹேட்ச்பேக் கார் முதல் ஹைபிரிட் கார்கள் வரை விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.

குறிப்பாக விலை விபரம் மாநிலம் , டீலர்கள் மற்றும் மாவட்ட வாரியாக மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரியோ மற்றும் ஜாஸ் கார்களுக்கு ரூ. 12,300, டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 12,300 மற்றும் பிரசத்தி பெற்ற செடான் ரக சிட்டி காருக்கு ரூ. 28,500 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

அமேஸ் மாடலுக்கு 13,800 ரூபாய் , பிஆர்-வி எஸ்யூவி மாடலுக்கு 30,390 ரூபாய் மற்றும் பிரிமியம் ரக சிஆர்-வி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1.30 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள விலை விபரம் டீலர்களை பொறுத்து மாறுபடும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

மாடல் தமிழ்நாடு (எக்ஸ்-ஷோரூம்)  புதுச்சேரி (எக்ஸ்-ஷோரூம்)
பிரியோ ரூ.4.76 – 6.82 லட்சம் ரூ.4.76 – 6.85 லட்சம்
அமேஸ் ரூ. 5.51 – 8.43 லட்சம் ரூ. 5.55 – 8.49 லட்சம்
ஜாஸ் ரூ.5.96 – 9.31 லட்சம் ரூ.5.96 – 9.31 லட்சம்
WR-V ரூ.7.77 – 9.99 லட்சம் ரூ.7.77 – 10.01 லட்சம்
சிட்டி ரூ.8.66 – 13.69 லட்சம் ரூ.8.65 – 13.69 லட்சம்
BR-V ரூ.8.99– 13.11 லட்சம் ரூ.8.99 – 13.11 லட்சம்
CR-V ரூ.22.01 – 25.96 லட்சம் ரூ.22.03 – 25.98 லட்சம்
அக்கார்டு ஹைபிரிட் அறிவிக்கப்படவில்லை

Exit mobile version