இந்தியாவில் 3,669 ஹோண்டா அக்கார்டு கார்கள் திரும்ப அழைப்பு

0

honda accord

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் 2003-2006 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்த 3,669 ஹோண்டா அக்கார்டு கார்களை தானாக முன்வந்து டகடா காற்றுபை இன்ஃபிளேட்டர்களை முற்றிலும் இலவசமாக மாற்றித்தர உள்ளது.

Google News

சர்வதேச அளவில் உயர்காக்கும் பாதுகாப்பு ஏர்பேக்குகளை தயாரிக்கும் டகடா நிறுவனத்தின் காற்றுப்பைகளில் உள்ள இன்ஃபிளேட்டர் பிரச்சனையின் காரணமாக இலவசமாக மாற்றித் தரப்பட்டு வருகின்றது.

ஹோண்டா அக்கார்டு

இந்திய பயணிகள் வாகன சந்தையில் 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்யபட்ட 3,669 கார்களில் ஒட்டுநருக்கான காற்றுப்பை இன்ஃபிளேட்டர் பிரச்சனை உள்ளதாக கண்டறியபட்டுள்ள நிலையில், முற்றிலுமாக இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது.

உங்கள் கார் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய ஹோண்டா இந்தியாவின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தின் மூலம் உங்களது காரின் 17 இலக்க எண்ணை சோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

டகடா காற்றுப்பை பிரச்சனையின் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு கார் நிறுவனங்கள், இலவசமாக ஏர்பேக் இன்ஃபிளேட்டர் மாற்றித் தரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனமும், ஒரு பகுதியாக தானாக முன்வந்து கார்களில் உள்ள பிரச்சனைக்கான தீர்வினை இலவசமாக வழங்க உள்ளது.