ஆட்டோ எக்ஸ்போ 2020: பவர்ஃபுல்லான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் வெளியானது

0

grand i10 nios turbo

ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ வேரியண்ட் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது.

Google News

சமீபத்தில் விற்பனைக்கு வெளியான புதிய ஹூண்டாய் ஆரா செடான் காரில் இடம்பெற்றுள்ள அதே டர்போ பெட்ரோல் என்ஜினை கிராண்ட் ஐ10 நியோஸ் பெற உள்ளது. மற்றபடி தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருமை நிறத்திலான ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் மற்றும் டர்போ பேட்ஜிங் மற்றும் கருப்பு நிற மேற்கூறையை பெற்றள்ளது. இன்டிரியரை பொறுத்தவரை கருப்பு நிறத்திலான இருக்கை கொடுக்கப்பட்டு சிவப்பு நிறத்திலான ஸ்டிச்சிங் செய்யப்பட்டுள்ளது.

ஆரா என்ஜின் விபரம் பின்வருமாறு.., பிஎஸ்-6 ஆதரவை பெற்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரா செடானில் பொருத்தப்பட்டுள்ளது. 100 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும்  இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.